AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!

Tamil Nadu Elections 2026 : திமுகவில் இணைந்தது முதல் 3 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட சி. வெ. கணேசன் தனது வெற்றியை பதிவு செய்தார். தற்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது .

C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
திட்டக்குடி தொகுதியில் வெற்றித் தடம் பதிப்பாரா சி.வெ.கணேசன்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 25 Mar 2026 17:09 PM IST

திமுகவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருபவர் சி. வெ. கணேசன். இவர், கடந்த 1959- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16- ஆம் தேதி வெங்கடன் மற்றும் சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அரசியல் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் படிப்படியாக வளர்ந்து வந்த சி. வெ. கணேசன் கடந்த 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம், மங்களூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர், 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட சி.வெ. கணேசன் தனது வெற்றியை பதிவு செய்ததுடன் மக்களவைக்கு எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டார்.

3- ஆவது முறை எம். எல். ஏ. பதவியுடன் அமைச்சர் பதவி

பின்னர் 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய சி. வெ. கணேசன் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2- ஆவது முறையாக எம்எல்ஏ பதவியை அடைந்தார். பின்னர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்பட்ட சி. வெ. கணேசன் 3- ஆவது முறையாக எம். எல். ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் அடி எடுத்து வைத்தார். அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இலாகா வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சி. வெ. கணேசனுக்கு 9 சதவீதம் வாக்கு வங்கி உயர்வு

கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட சி. வெ. கணேசன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி. அய்யா சாமியை வீழ்த்தி 40.67 சதவீத வாக்குகள் பெற்று தனது வெற்றியை நிலை நிறுத்தினார். பின்னர், கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்பட்ட கணேசன் பாஜக வேட்பாளர் டி. பெரிய சாமியை வீழ்த்தி 50.08 சதவீத வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு

2016 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் 9 சதவீதம் அளவுக்கு அவருக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் சி.வெ.கணேசன் களமிறக்கப்பட உள்ளார். அவருக்கு வெற்றி வசப்படும் வகையில் கள நிலவரம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, தேர்தலில் சி.வெ. கணேசன் வெற்றி பெற்று வந்தால் மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

Follow Us