R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!
Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை செம்மல் என்ற பெயருக்கு சொந்தக்காரரும், ராணிப்பேட்டை ஹீரோவுமான அமைச்சர் ஆர். காந்தி மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வசப்படும் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
தமிழக அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆர். காந்தி. இவர், கடந்த 1945- ஆம் ஆண்டு செப்டம்பர் 5- ஆம் தேதி சின்னப்பா என்பவருக்கு மகனாக பிறந்தார். அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். அப்போது, திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆற்காடு வீராசாமியிடம் ஆர். காந்தி அரசியல் பாடத்தை கற்றார். பின்னர், கட்சியில் படிப்படியாக வளர்ந்து வந்த ஆர். காந்திக்கு கடந்த 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அதில், தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் 50.80 சதவீத வாக்குகள் பெற்றார். கடந்த 2000- ஆம் ஆண்டு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி அவரை தேடி சென்றது. 2001 சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டையில் தொகுதியில் களமிறங்கிய ஆர். காந்தி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.
வெற்றி-தோல்வியை சந்தித்த ஆர். காந்தி
இதன் பின்னர் 2004- ஆம் ஆண்டு அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளரின் பதவி மீண்டும் அவரிடமே சென்றது. இதைத் தொடர்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் 2- ஆவது முறையாக களமிறங்கிய ஆர். காந்தி 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை மீண்டும் பதிவு செய்தார். பின்னர், 2011 சட்டமன்ற தேர்தலில் 4- ஆவது முறையாக களமிறங்கிய ஆர். காந்தி தோல்வியை தழுவினார். இதன் பின்னர் கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களம் இறக்கப்பட்ட ஆர். காந்தி 43.33 சதவீத வாக்குகள் பெற்று 3- ஆவது முறை வெற்றியை பதிவு செய்தார்.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!




16 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் பொறுப்பு
பின்னர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் இறங்கிய ஆர். காந்தி 49. 79 வாக்குகள் பெற்று 4- ஆவது முறை வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம், ராணிப்பேட்டை தொகுதியின் முகமாக அமைச்சராக காந்தி இருந்து வருகிறார். இதைத் தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், ஆர். காந்தி முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். மேலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்கவராக ஆர். காந்தி பார்க்கப்படுகிறார்.
ஆர்.காந்திக்கு சாதகமாக இருக்கும் ராணிப்பேட்டை களம்
தொடர்ச்சியாக சுமார் 20 ஆண்டுகள் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறார். திமுகவின் சாதனை செம்மல் என்ற பெயர் காந்திக்கு உடையதாகும். ஆர். காந்தி மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராணிப்பேட்டை களம் அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.