AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் பிரச்சாரம் செய்யலாம் – தேர்தல் ஆணையம் அனுமதி

EC Approves Vijay Election Campaign: சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காணவிருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த விஜய் உள்ளிட்ட 10 பேருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் பிரச்சாரம் செய்யலாம் – தேர்தல் ஆணையம் அனுமதி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Mar 2026 18:29 PM IST

சென்னை, மார்ச் மார்ச் 25 : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கவுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காணவிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 10 நாட்களான நிலையில் விஜய் இதுவரை மக்களை சந்திக்காதது அந்த கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

விஜய் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி

இந்த நிலையில் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் மார்ச் 25, 2026 அன்று அனுமதி வழங்கியுள்ளது. விஜய் மட்டுமல்லாமல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவர் அர்ஜுனா உள்ளிட் நட்சத்திர பேச்சாளர்கள் 10 பேருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதையும் படிக்க  : அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு… அடித்து ஆடும் எடப்பாடி பழனிசாமி!

தவெக மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சியை சேர்ந்த கட்சிகளை சேரந்த நட்சத்திர பேச்சாளர்கள் 20 பேருக்கும் என மொத்தம் 210 பேச்சாளர்களுக்கு மார்ச் 25, 2026 தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவிருக்கிறார். மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தவெக தீவிர வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க : அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

இதனையடுத்து அங்கு கட்சியின் தேர்தல் அலுவலகம் தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய் பெரம்பூரில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அங்கிருந்து தேர்தல் பணிகளை விஜய் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 10 நாட்களாகும் நிலையில் விஜய் மக்களை சந்திக்காதது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

 

Follow Us