AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Virugambakkam Constituency Election 2026: திமுக VS அதிமுக.. போக்குவரத்து நெரிசல் முதல் குடிநீர் பிரச்சனை வரை.. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு?

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. இது சென்னை நகரில் அமைந்துள்ள முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாகும். நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, விருகம்பாக்கம், கோயம்பேடு, சாலிகிராமம், நெசப்பாக்கம், வடபழனி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Mar 2026 22:01 PM IST
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. இது சென்னை நகரில் அமைந்துள்ள முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாகும். நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, விருகம்பாக்கம், கோயம்பேடு, சாலிகிராமம், நெசப்பாக்கம், வடபழனி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. இது சென்னை நகரில் அமைந்துள்ள முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாகும். நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தொகுதி, விருகம்பாக்கம், கோயம்பேடு, சாலிகிராமம், நெசப்பாக்கம், வடபழனி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

1 / 5
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் ஏ.எம்.வி. பிரபாகராஜா சுமார் 74,351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் விருது ரவி 55,984 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 / 5
இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சுமார் 50 சதவீதம் எனக் கருதப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்கள் இத்தொகுதியில் அடங்குகின்றன. இது சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும்.

3 / 5
விருகம்பாக்கம் தொகுதியில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நகர்ப்புற பகுதியாக இருப்பதால், பல முக்கிய பிரச்சனைகள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. மெட்ரோ போன்ற புதிய வசதிகள் வந்தபோதிலும், நெரிசல் குறையவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேலும், வெயில்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் நீர் தேக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு பிரச்சனைகளும் தொடர்கின்றன.

4 / 5
வரவிருக்கும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் போட்டியிடுகிறார். அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளைப் பொறுத்தே இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

5 / 5
Follow Us