AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்..

Weather Update: இன்று (மார்ச் 26) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். மார்ச் 27 முதல் மார்ச் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்..
கோப்புப் புகைப்படம்Image Source: pinrest
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Mar 2026 06:33 AM IST

Tamilnadu Weather today: தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரையில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக வறண்ட வானிலை நீடிக்கும் என்ற கணிப்பின்படி நேற்றும் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வந்து, மக்களுக்கு குளிர்ச்சியை தந்தது. அடுத்த சில நாட்களுக்க வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

தமிழக வானிலை நிலவரம்:

அதன்படி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 26) வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து, நாளை (மார்ச் 27) இதே வறட்சி நிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 28 முதல் 31ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை இன்று (மார்ச் 26) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. மார்ச் 27 முதல் மார்ச் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று (மார்ச் 26) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். மார்ச் 27 முதல் மார்ச் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

இதையும் படிக்க: இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us