
Summer
பனிக்காலம் முழுவதுமாக மறைந்து, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெப்பக் காற்று வீசுவதால் மதிய வேளையில் வெளியே செல்வது கடினமாகி வருகிறது. தொடர்ந்து, இனிவரும் நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் வெப்பம் காரணமாக ஒருவர் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே, கோடை காலம் வர தொடங்கும் முன்பே, நீங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்ற வேண்டும். இந்த சிறிய விஷயங்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம், வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நாம் இந்த தொகுப்பில் கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியம் தொடரான குறிப்புகள், எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்ற செய்திகளை காணலாம்.
Summer Health Tips: கோடையில் தினமும் 1 ஸ்பூன் ஆளி விதை.. நீரேற்றத்தை தரும்! சோர்வை போக்கும்!
Flaxseed Benefits for Summer: கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தணித்து, நீரிழப்பைத் தடுக்க ஆளி விதை மிகவும் உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. தயிரில் கலந்து அருந்துவது அல்லது உணவில் சேர்த்துக்கொள்வது மூலம், வெயில் சூட்டில் இருந்து பாதுகாத்து, செரிமானத்தை மேம்படுத்தி, எடை கட்டுப்பாட்டிற்கும் உதவும்.
- Mukesh Kannan
- Updated on: May 6, 2025
- 16:23 pm