Summer Health Tips: கோடையில் தினமும் 1 ஸ்பூன் ஆளி விதை.. நீரேற்றத்தை தரும்! சோர்வை போக்கும்!
Flaxseed Benefits for Summer: கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தணித்து, நீரிழப்பைத் தடுக்க ஆளி விதை மிகவும் உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. தயிரில் கலந்து அருந்துவது அல்லது உணவில் சேர்த்துக்கொள்வது மூலம், வெயில் சூட்டில் இருந்து பாதுகாத்து, செரிமானத்தை மேம்படுத்தி, எடை கட்டுப்பாட்டிற்கும் உதவும்.

கோடைக்காலம் (Summer) தொடங்கியதும் மக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் மற்றும் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இந்த வெயில் காலத்தில் உடலானது வியர்வை, நீரிழப்பு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை தரும். இதுபோன்ற சூழ்நிலையில் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கும், குளிர்ச்சியை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் (Nutritions) நிறைந்த சிலவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அந்தவகையில், கோடை காலத்தில் உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் வழங்கக்கூடிய விதைகளில் ஒன்றான ஆளி விதைகளை (Flaxseed) எடுத்துகொள்ளலாம். இவற்றை உணவில் சேர்த்துகொள்வதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை தருவது மட்டுமின்றி, சருமத்திற்கு கூடுதல் பொலிவையும் தரும்.
உடல் குளிர்ச்சி:
கோடை காலத்தில் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைப்பது மிக மிக முக்கியமானது. இந்த வேலையை ஆளி விதை சிறப்பாக கையாளூம். ஆளி விதை உடலுக்குள் சென்று உங்களை உள்ளிருந்து குளிர்விக்கும் வேலைகளை செய்கிறது. அதன்படி, ஒரு கப் தயிரில் ஆளி விதை ஊற வைத்த தண்ணீர் அல்லது ஆளி விதை பொடியை கலந்து தினமும் பருகலாம். இது உங்களுக்கு வெயில் காலத்தில் புத்துணர்ச்சி அளிப்பதோடு உங்கள் உடலை குளிர்விக்கும்.
நீரேற்றம்:
ஆளிவிதைகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. அதன்படி, கோடை காலத்தில் வியர்வையால் நீரிழப்பு ஏற்படும்போது, ஆளிவிதை அதை உடலில் சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும். எனவே, கோடை காலத்தில் தினமும் ஆளி விதைகளை உட்கொள்வது நீரிழப்பு அபாயத்தை குறைக்கும்.
எடை கட்டுப்பாடு:
கோடை காலத்தில் ஆரோக்கியமான இருக்க விரும்பும் நபர்களுக்கு ஆளிவிதை ஒரு அழியா சொத்து என்றே சொல்லலாம். ஆளி விதையை உட்கொள்வது வயிற்றில் உண்டாகும் பசியை குறைத்து, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இது கோடை காலத்தில் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்:
ஆளி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த விதைகள் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும், குடல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதிலும் பல பயனுள்ள விஷயங்களை செய்கிறது.
ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, உடலில் நோய்களை ஏற்படுத்தாமல் தடுக்கிறது. ஆளி விதைகளை வறுத்து சாப்பிடும்போது, செரிமானமும் ஆரோக்கியமான நடைபெறும்.
கோடை காலத்தில், ஒவ்வொரு நபரும் தன்னை குளிர்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக அதிக பணத்தையும் செலவிடுகிறார்கள். இது சில நேரங்களில் பயனை தராமலும் போகிறது. எனவே குறைந்த விலையில் அதிவிரைவான பயனை பெற விரும்புவோர் செய்ய வேண்டிய ஒரே வேலை, உங்கள் வீட்டில் ஆளி விதைகளை வாங்கி அதை உட்கொள்வதுதான்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)