Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Summer Health Boost: கோடையில் நலம் தரும் நெல்லிக்காய்.. இந்த 4 பொருட்களுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் அட்டகாசம்..!

Amla Benefits: கோடை காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காயுடன் தேன், இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை சேர்த்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானம், வீக்கம், சுவாசப் பிரச்சனைகளையும் தடுக்கிறது. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ள இந்தக் கூட்டணியால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது அதிக பலன் கிடைக்கும்.

Summer Health Boost: கோடையில் நலம் தரும் நெல்லிக்காய்.. இந்த 4 பொருட்களுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் அட்டகாசம்..!
நெல்லிக்காய்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 May 2025 16:20 PM

பெரிய நெல்லிக்காயின் (Amla) நல்ல பண்புகளை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நெல்லிக்காய் ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது. மற்ற பருவ காலங்களில் நெல்லிக்காய் எப்படி நல்லது செய்தாலும், கோடை காலத்தில் இதன் பலன்கள் ஏராளம். நெல்லிக்காயில் வைட்டமின் சி (Vitamin C), பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோயெதிர்ப்பு பண்புகளுக்கு (Immunity) பங்களிக்கிறது. அதேபோல், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபினால்களின் அளவு வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்தநிலையில், கோடைக்காலத்தில் நெல்லிக்காயிடன் இந்த உணவுகளை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

நெல்லிக்காய் – தேன்:

நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது கோடை காலத்தில் பல வகையான நன்மைகளை தரும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். அதாவது, நெல்லிக்காயை தேனுடன் சேர்ந்து சாப்பிடும்போது, உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கிறது. மேலும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த இந்த 2 உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், குடல் ஆரோக்கிய பிரச்சனைகள், வீக்கம் மற்றும் சுவாச பிரச்சனைகளையும் ஏற்படாமல் தடுக்கிறது. அதன்படி, நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் பொடியுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

நெல்லிக்காய் – இஞ்சி:

நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும். நெல்லிக்காயுடன் இஞ்சியை உட்கொள்வது வயிற்று வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது. அதேபோல், இஞ்சியின் காரத்தன்மையும், நெல்லிக்காயின் புளிப்பு சுவையும் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. அதன்படி, நெல்லிக்காய் ஜூஸிடன் அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி போன்றவற்றை சேர்த்து அதனுடன் தேன் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

நெல்லிக்காய் – மஞ்சள்:

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் என இரண்டும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வீக்கம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை மஞ்சளுடன் சேர்ந்து சாப்பிடும்போது, அது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி வீக்கத்தை கட்டுப்படுத்தும். மேலும், இவை இரண்டும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். 1 டீஸ்பூன் நெல்லிக்காயை பொடி அல்லது நெல்லிக்காய் ஜூஸூடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் – எலுமிச்சை:

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை என இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும், உடலை நச்சு நீக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவி செய்யும். மேலும், இவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வெள்ளை இரத்த அளுக்களை வலுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 2 டீஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸூடன் அரை எலுமிச்சை ஜூஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!...
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி...
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!...
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!...
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!...
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?...
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது...
'தக் லைஃப்' படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நெகிழ்ச்சி!
'தக் லைஃப்' படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நெகிழ்ச்சி!...
நீட் முடிவு வெளியீட்டுக்கு தற்காலிக தடை: சென்னை உயர்நீதிமன்றம்...
நீட் முடிவு வெளியீட்டுக்கு தற்காலிக தடை: சென்னை உயர்நீதிமன்றம்......
2026 தேர்தலில் படுதோல்விதான்! எடப்பாடி பழனிசாமியை சாடிய RS பாரதி
2026 தேர்தலில் படுதோல்விதான்! எடப்பாடி பழனிசாமியை சாடிய RS பாரதி...
மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்- சுஜாதா விஜய்குமார்!
மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழவேண்டும்- சுஜாதா விஜய்குமார்!...