Summer Health Tips: கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் பானங்கள்.. ஆரோக்கியத்துடன் அழகை பராமரிக்கும்..!
Summer Cooling Drinks: கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விளாம்பழ ஜூஸ், கரும்புச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் போன்ற பானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விளாம்பழம் செரிமானத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கரும்புச்சாறு உடலுக்கு ஆற்றலை அளித்து நீரிழப்பை தடுக்கிறது. ரோஸ் வாட்டர் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.

கோடை (Summer) மதிய வெயிலானது நம் தலையில் நாளுக்குநாள் நெருப்பை கக்கிக்கொண்டு வருகிறது. அடிக்கும் வெட்கைக்கு ஜில்லென்று ஏசி அறையில் எப்போது நுழைவோம் என்று ஒவ்வொருவரும் காத்திருக்கிறோம். இதுபோன்ற சூழலில் பலரும் வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ் (Juice), தர்ப்பூசணி பழம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்கின்றனர். அந்தவகையில், வெயிலில் இருந்து தப்பிக்க இந்த வகையான ஜூஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இவை, நம் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து சக்தியை தரும். இத்தகைய சூழ்நிலையில், பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களின் ரகசியமாக இருந்து வரும், கரும்பு (Sugar Cane) மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸின் பயன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
விளாம்பழ ஜூஸ்:
இந்தியாவில் விளையும் விளாம்பழம் ‘ஆயுர்வேதத்தின் பழம்’ என்று அழைக்கப்படுகிறது. கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் விளாம்பழம் அமிர்தம் போன்றது. விளாம்பழத்தில் டானின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை ஏராளமாக உள்ளது. இது வயிற்றுப்போக்கு மற்றும் அமிலத்தனமை போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், விளாம்பழம் உடலில் குளிர்ச்சியை பராமரிப்பதோடு, செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. இது இரத்த சுத்திகரிப்புக்கும் உதவியாக செயல்படும்.
விளாம்பழம் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் பளபளப்பை தருகிறது. உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, முகத்தில் உள்ள பருக்களை குறைக்கிறது.
கரும்புச்சாறு:
கருப்புச்சாறு கோடைக்காலத்தில் ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. இயற்கையான இனிப்பு சுவையை கொண்டுள்ள, இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. கருப்புச்சாற்றில் குளுக்கோஸ், பிரக்டோஸ், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது. மேலும், கோடைக்காலத்தில் நீரிழப்பை தடுக்கவும், எலக்ட்ரோலைட் சமநிலையை பாராமரிக்கிறது. கரும்புச்சாறு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.
கரும்புச்சாறு குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவி செய்யும். இதில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை பளபளப்பாக்க மாற்ற உதவி செய்கிறது.
ரோஸ் வாட்டர்:
ரோஜா அழகின் சின்னம் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரும். ரோஜா பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கோடையில் உங்களுக்கு தேவையான குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. ரோஸ் வாட்டர் வயிற்றுக்கு குளிர்ச்சியை அளித்து, மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை மேம்படுத்தும். மேலும், இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்கி ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இது முகத்தை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் மாற்றும். அதன்படி, பால் அல்லது தண்ணீரில் கலந்து ரோஸ் சிரப் கலந்து குடிக்கலாம். இவை சுவையுடன் நன்மைகள் என இரண்டையும் தரும்.