Summer Curd Storage: கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
Keep Your Curd Fresh Longer: கோடை காலத்தில் தயிரின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு புதியதாக வைத்திருப்பது என்பது பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. கண்ணாடிப் பாத்திரங்களில் சேமிப்பது, மூடி வைப்பது மற்றும் நீண்ட நேரம் வெளியில் வைப்பதைத் தவிர்ப்பது போன்ற சில குறிப்புகள் இதில் அடங்கும். தயிரின் புளிப்புத்தன்மையைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும், தயிரை சரியாகத் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

கோடை காலத்தில் (Summer) உங்கள் ஆரோக்கியத்திற்கு தயிர் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இது உணவுக்கு கூடுதல் சுவையை தரும். சிலர் வெயிலில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே தயிர் (Curd) செய்கிறார்கள், சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்து பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், பல நேரங்களில் கடைகளில் இருந்து வாங்கி வந்த தயிர் சிறிது நேரத்திலேயே புளிப்பு சுவையை தரும். இதனால், தயிர் புதியதா இல்லையா என்ற கேள்வி மனதில் எழும். கோடையில் தயிர் சாப்பிடுவது வயிற்றுக்கும், செரிமான அமைப்பிற்கு ஆரோக்கியம் (Health) தரும். இருப்பினும், கோடை காலத்தில் தயிர் விரைவாக கெட்டுவிடும். இதற்கான காரணம்..? இதை கெட்டு போகாமல் தடுப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது..?
பாலில் உள்ள லாக்டோபாகிலஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் பாலை தயிராக மாற்றுகிறது. இதனால், பாலை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கும்போது தயிராக மாற்றும். பால் தயிராக மாறியபின், இதே பாக்டீரியாக்கள் செழித்து வளர தொடங்கும். இதனால், தயிர் மேலும் புளிப்பாக மாற தொடங்குவதுடன், அதன் மீது பச்சை நிற பூஞ்சை வளர தொடங்கும். இதன்பின், தயிரை உணவில் எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில நேரங்களில் அதிக ஈரப்பதம், அதிகப்படியான நொதித்தல், முறையற்ற சேமிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் தயிர் கெட்டுவிடும்.
தயிர் விரைவில் கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்..?
கண்ணாடி பாத்திரம்:
தயாரிக்கப்பட்ட தயிர் அல்லது கடைகளில் வாங்கிய தயிர் விரைவில் கெட்டுப்போகிறது என்றால் இந்த முறையை செய்து பாருங்கள். அதாவது, தயிரை சில்வர் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதற்கு பதிலாக, பீங்கான் அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட ஜாடிகளில் வைக்கலாம். இது தயிர் புளிப்பாக மாறுவதை தடுப்பதுடன், நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவி செய்யும்.
மூடி வைத்தல்:
தயிரை பிரிட்ஜில் வைக்கும்போது பலரும் செய்யும் ஒரு தவறு, அதை மூடாமல் அப்படியே வைப்பதுதான். திறந்து வைப்பதாலும் தயிர் மீது விரைவாக பாக்டீரியா வளர தொடங்கும். மேலும், தயிரின் மீது மூடி வைக்கப்படாவிட்டால், குளிர்சாதன பெட்டி வாயுவின் வாசனை அதற்குள் நுழைந்து, தயிரின் சுவையை கெடுத்துவிடும். இதனாலும், தயிர் விரைவாக கெட தொடங்கும். எனவே, தயிரை பிரிட்ஜில் வைக்கும்போது மூடி வைப்பது நல்லது. இது தயிரை விரைவாக கெட்டுவிடும் தன்மையை கெடுத்து, புத்துணர்ச்சியுடன் வைக்க உதவி செய்யும்.
நீண்ட நேரம் வெளியே வைப்பதை தவிருங்கள்:
கடைகளில் இருந்து வாங்கி வந்த தயிரை பயன்படுத்திய பிறகு, உடனடியாக கண்ணாடி ஜாரில் மாற்றியபிறகு, பிரிட்ஜில் வைக்கவும். தயிரை வெளியே நீண்ட நேரம் வைப்பது சீக்கிரம் புளிப்பாக மாற்ற உதவி செய்யும்.
தயிர் சரியான முறையில் வர என்ன செய்யலாம்..?
தயிர் நன்றாக கெட்டியாக மாற, பாலில் உறை மோரை ஊற்றிய பிறகு எப்போதும் இரவு முழுவதும் வெளியே மூடி வைக்கவும். பிரிட்ஜில் வைத்தால் அது தயிராக மாறாது. இதன் காரணமாக, தயிர் கெட்டியாக மாற அறை வெப்பநிலை தேவை. இதையடுத்து, தயிர் கெட்டியானதும், உடனடியாக அதை பிரிட்ஜில் வைக்கலாம். இதுவும் தயிர் விரைவாக புளிப்பாக மாறுவதை தடுக்கும்.