Summer Food Safety: கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுப்போகிறதா..? இப்படி செய்தால் கெட்டுப்போகாது..!
Food Spoilage Prevention: கோடைக்காலத்தில் உணவு விரைவில் கெட்டுப்போகும் பிரச்சனைக்கு தீர்வு காண, சில எளிய குறிப்புகளை இந்தக் கட்டுரை வழங்குகிறது. சமைத்த உணவை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைப்பது, சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது, உணவை மீண்டும் மீண்டும் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை நன்கு கொதிக்க வைத்து சமைக்க வேண்டும். மீதமுள்ள உணவை மறுசூடாக்கி சாப்பிடுவது நல்லது.

கோடைக்காலத்தில் (Summer) எவ்வளவு பார்த்து பார்த்து சமைத்தாலும் உணவு (Food) சீக்கிரமாகவே கெட்டுவிட தொடங்கும். கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது பாக்டீரியாக்கள் வேகமாக வளர தொடங்கி, உணவின் புத்துணர்ச்சியானது குறைய தொடங்கும். பல நேரங்களில் காலையில் தயாரிக்கப்படும் உணவுகள் மதியம் நேரம் வரை தாங்குவது கிடையாது. இந்த பாக்டீரியாக்கள் உணவை வீணாக்குவது மட்டுமல்லாமல், அதை சாப்பிடும்போது உடலில் மோசமான விளைவை உண்டாக்கும். இதை எடுத்துக்கொள்ளும்போது புட் பாய்சன், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், சில எளிய குறிப்புகளை மேற்கொள்வதன்மூலம், உணவுகள் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.
என்ன செய்யலாம்..?
முதலில் சமைத்த பிறகு உணவை உடனடியாக வைப்பது நல்லது. உணவை நீண்ட நேரம் திறந்து வைப்பதன்மூலம், பாக்டீரியாக்கள் விரைவாக அதில் வளர தொடங்கும். உணவு லேசாக சூடு ஆறியதும், உடனடியாக குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைப்பது நல்லது. உஙக்ள் வீட்டில் குளிர்சாதன பெட்டி இல்லையென்றால், உணவை குளிர்ந்த இடத்தில் வைக்கலாம். சமைத்த உணவை எப்போதும் சுத்தமான பாத்திரத்தில் வைப்பது நல்லது. அதன்படி, எஃகு அல்லது கண்ணாடி பாத்திரங்கள் பிளாஸ்டிக்கை விட பாதுகாப்பானதாக இருக்கும்.
எளிய குறிப்புகள்:
- சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்கள் உணவை விரைவாக கெடுக்கும் என்பதால், பாத்திரங்களை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்தவும். உணவை சமைத்தபிறகு, அதை மீண்டும் மீண்டும் கைகளில் தொடுவதும் உணவை விரைவில் கெட்டுப்போக செய்யும். நீங்கள் உணவை மீண்டும் மீண்டும் தொட்டு வெளியே எடுத்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை கெட்டுப்போக செய்யும்.
- பருப்பு வகைகள், அரிசி மற்றூம் காய்கறிகள் போன்றவை கோடை காலங்கள் மட்டுமல்ல, மற்ற பருவ காலங்களிலும் உணவை கெட்டுப்போக செய்யும். அத்தகைய சூழ்நிலையில், இவற்றை நன்கு கொதிக்க வைத்து சமைக்கவும், இதனால் அவற்றில் பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்புகள் குறையும்.
- ஒரு நேரம் சாப்பிட்டபிறகு மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு சூடாக்க வேண்டும். உணவை சூடாக்கும்போது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டு பாதுகாப்பான உணவாக மாற்றுகிறது.
- ஆபிஸ் அல்லது சுற்றுலா போன்று எங்காவது உணவை எடுத்து சென்றால், காற்று புகாத கொள்கலனில் வைப்பது நல்லது. இது உணவை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.
- தயிர், தயிர் பச்சடி போன்ற போன்ற குளிர்ந்த பொருட்களை நீண்ட நேரம் வெளியே வைக்க வேண்டாம், ஏனென்றால் அவை புளிப்பாக மாறி மிக விரைவாக கெட்டுவிடும். கைகளை கழுவிய பின்னரே உணவை சமைக்கவும், சமையலறை மேற்பரப்புகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
காய்கறி மற்றும் பருப்பு வகைகள்:
சமைக்கும்போது காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை நன்கு கழுவிய பின்னரே சமைப்பது நல்லது. சில நேரங்களில் உணவு கெட்டுப்போவதற்கு, அவற்றில் இருக்கும் மூலப்பொருட்களில் இருக்கும் பாக்டீரியாக்களும் காரணமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், தேவையான அளவு மட்டுமே உணவைத் தயாரிக்கவும். கோடை காலத்தில் முடிந்தவரை அவ்வபோது சமைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து சரியான முறையைப் பின்பற்றுவதன் மூலம், உணவை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்களையும் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.