Summer Health Tips: கோடைக்கால சூப்பர்ஃபுட் பாகற்காய்.. தவறுதலாக கூட இந்த 4 உணவுகளுடன் சாப்பிடாதீர்கள்!
Bitter Gourd Side Effects: கோடைக்கால சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் பாகற்காய், அதன் சிறந்த ஊட்டச்சத்துக்களுக்காக அறியப்படுகிறது. ஆனால், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். பால், மாம்பழம், தயிர், மற்றும் முள்ளங்கி போன்றவற்றுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை அஜீரணம், தோல் பிரச்சனைகள், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, பாகற்காயின் நன்மைகளை அனுபவிக்க, இவற்றை தவிர்க்கவும்.

கோடைக்காலத்தில் (Summer) தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவை சிறந்த நீர்ச்சத்துகளை தரும். அதுபோல், கோடையில் பாகற்காயையும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அதன்காரணமாக, பாகற்காய் கோடைக்கால சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. பாகற்காய் (Bittergourd) சுவையில் கசப்பாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பார்க்கப்படுகிறது. இதில் துத்தநாகம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால, இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காயை விட ஒரு மருந்து இல்லை என்றே சொல்லலாம். மேலும், எடை குறைக்க விரும்புவோர், அழகை பராமரிக்க விரும்புவோர்களுக்கு பாகற்காய் ஒரு கிப்ட். பாகற்காய் சாறு குடிப்பதால் சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்கும். என்னதான் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்து இருந்தாலும், பாகற்காய் சாப்பிடும்போது சில உணவுகளுடன் எடுத்துக்கொள்ள கூடாது. எனவே, எந்தெந்த உணவுகளுடன் பாகற்காயை தவிர்க்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
ஆரோக்கியம் நிறைந்தவை:
பாகற்காய் சாப்பிடுவது உடலை நச்சு நீக்கம் செய்ய பெரிதும் உதவி செய்யும். நீங்கள் அதை வாரத்திற்கு ஒருமுறை நம் உணவில் ஒரு பகுதியாக சேர்த்து கொள்ளலாம். பாகற்காய் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்வதன் மூலம், பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், பாகற்காய் சரியான முறையில் எடுத்துகொள்வது முக்கியது. இதை சில உணவுகளுடன் சேர்ந்து தெரியாமல் எடுத்துகொள்ளும்போது, உடலில் சில பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
பாகற்காய் – பால்:
சிலர் சாப்பிடும்போது பால் குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இது நல்லது என்றாலும், ஒரே நேரத்தில் பாலுடன் பாகற்காயை எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலில் கால்சியம் மற்றும் பல வைட்டமின்கள் இருந்தாலும், பாகற்காய் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும். இது செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பாகற்காய் – மாம்பழம்:
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைக்கால சீசன் பழமாகும். இதனுடன் பாகற்காயை சேர்த்து உணவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாகற்காய் மற்றும் மாம்பழத்தை இன்றாக சேர்த்து உண்டால், அது அமிலத்தன்மை மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும். மாம்பழத்துடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
பாகற்காய் – தயிர்:
கோடைக்காலத்தில் தயிர் மற்றும் பாகற்காயை தனித்தனியாக சாப்பிடும்போது பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும். அதுவே, இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாகற்காய் தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் தோல் அரிப்பு, சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த உணவு கலவை மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இதே காரணங்களுக்காக மீனையும், தயிரையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.
பாகற்காய் – முள்ளங்கி:
பாகற்காயுடன் முள்ளங்கியையும் எந்த காலத்திலும் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இரண்டிலும் இருக்கும் வெவ்வேறு விளைவுகள் மிலத்தன்மை மற்றும் தொண்டையில் இருமல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்களுக்கு ஏற்கனவே சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், பாகற்காய் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சாப்பிடக்கூடாது. இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்தையும், சருமத்தையும் கெடுக்கும் சில விஷயங்கள் உடலுக்குள் நடக்கும்.