AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..

மார்ச் 28ஆம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை நகரில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. முதல் தேர்தல் என்பதால், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

வரும் தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – த.வெ.க தலைவர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Mar 2026 17:00 PM IST

சென்னை, மார்ச் 26, 2026: தமிழக வெற்றிக் கழகத்தைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் “தீய சக்தி” திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி என விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், கட்சிகள் தரப்பில் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

விஜயின் பிரச்சார பயணம்:

இதேபோல், மார்ச் 28ஆம் தேதி முதல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை நகரில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. முதல் தேர்தல் என்பதால், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி – விஜய்:

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்:

“இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளை தரக்குறைவான, சொல்லொணா வார்த்தைகளால் தி.மு.க. ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் விமர்சித்துள்ளார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பிரச்சார பயணத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்..

இதுபோன்ற நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி, உறுதி, உறுதி.”

Follow Us