வாக்காளர் அடையாள அட்டை – ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
How to Download Voter ID Card: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் அட்யைள அட்டை இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு செய்யலாம். இது வழக்கமான வாக்காளர் அடையாள அட்டை போல செல்லுபடியாகும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியிலில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 26, 2026 இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று வாக்காளர் அடையாள அட்டை. 18 வயதை கடந்த எந்த இந்திய குடிமகனும் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தேவையான வயது மற்றும் முகவரி ஆதாரங்களை சமர்ப்பித்து வாக்காளர் அட்டை பெறலாம். தற்போது, புதிய அட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே பெற்ற அட்டையை இழந்தவர்களும் அதனை ஆன்லைனில் சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும். அது குறித்து இந்த கட்டுரையயில் விரிவாக பார்க்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பு E-EPIC என அழைக்கப்படுகிறது. இது பிடிஎஃப் வடிவில் கிடைக்கும். இது ஒரிஜினல் வாக்காளர் அடையாள அட்டையை போலவே செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த டிஜிட்டல் வாக்காள் அடையாள அட்டையை நமது ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக எளிதாக டவுன்லோடு செய்யலாம்.
இதையும் படிக்க : சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி.. பங்கேற்காவிடில் கடும் நடவடிக்கை!
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு செய்வது எப்படி?
- இதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in-க்கு செல்லவும்.
- ஏற்கனவே லாகின் செய்திருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் ஓடிபி கொடுத்து லாகின் செய்யலாம்.
- புதிதாக செல்வபர்கள் Sign Up என்பதன் புதிய கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும்.
- பின்னர் லாகின் செய்த பிறகு E-EPIC Download என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
- உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள EPIC எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த Form Reference Number-ஐ உள்ளிடவும்.
- பின்னர் மாநிலம் என்பதில் தமிழ்நாடு என்பதை தேர்வு செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் விவரங்கள் திரையில் தோன்றும். பின்னர் Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- அதன் பிறகு Download e-EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்து பிடிஎஃப் வடிவில் வாக்காளர் அட்டையா டவுன்லோசு செய்யலாம்.
இதையும் படிக்க : பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார்?.. அவர்களின் பணிகள் என்ன என்ன?
இதற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைக்கபடவில்லை என்றால் e-KYC வசதி மூலம் இணைக்கலாம். மேலும் இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை, ஒரிஜினல் அடையாள அட்டை போல பயன்படுத்த முடியும்.



