இனி இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை சுலபமாக எடிட் செய்யலாம்.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
Instagram Now Lets Users To Edit Comments | இன்ஸ்டாகிராம் செயலி தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கமெண்டுகளை எடிட் செய்யும் அசத்தல் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொழுதுபோக்கிற்காக ஏராளமான மொபைல் செயலிகள் உள்ளன. அத்தகைய செயலிகளில் ஒன்றுதான் மெட்டாவின் (Meta) இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு உலக அளவில் ஏராளமான மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கமெண்டுகளை எடிட் செய்யும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான முக்கிய அம்சம்
இன்ஸ்டாகிராம் செயலியில் குறுஞ்செய்தி, ரீல்ஸ், வீடியோக்கள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த அம்சங்களுக்காகவே இன்ஸ்டாகிராம் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், பயனர்களுக்கான அட்டகாசமான அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு பதிவிட்ட கமெண்ட்டுகளை எடிட் செய்யும் அம்சம் தான் அது.
இதையும் படிங்க : இண்டக்ஷன் அடுப்பின் மேல் உள்ள வளையத்தை கவனித்திருக்கிறீர்களா? அதன் பயன் என்ன தெரியுமா?
இனி கமெண்டுகளை டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை
முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியில் ஏதேனும் தவறாக கமெண்ட் செய்துவிட்டால் அதனை சரிசெய்ய கமெண்டை டெலிட் செய்வது மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. ஆனால், இனி அந்த கவலை இல்லை. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சத்தின் மூலம் கமெண்டுகளை டெலிட் செய்யாமலே சுலபமாக அவற்றை எடிட் செய்துக்கொள்ளலாம். இது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவும்.
இதையும் படிங்க : சர்வீஸ் செய்த பிறகும் ஏசியில் கூலிங் கிடைக்கலையா? இந்த பிரச்னையாக இருக்கலாம் – எச்சரிக்கும் நிபுணர்கள்
கமெண்டுகளை எடிட் செய்வது எப்படி?
- கமெண்டுகளை எடிட் செய்ய பயனர்கள் தாங்கள் பதிவு செய்ய கமெண்டை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.
- அப்போது எடிட் ஆப்ஷன் தோன்றும். அதனை கிளிக் செய்து கமெண்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை செய்யலாம்.
இந்த புதிய அம்சத்தின் மூலம் மிக சுலபமாக கமெண்டுகளை எடிட் செய்யலாம். ஆனால், பயனர்களின் Transparency-க்காக நீங்கள் எடிட் செய்த கமெண்ட் Edited என்ற லேபிள் உடன் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.



