அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன்!
OnePlus Nord 6 Smartphone Introduced In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முன்னணி ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக ஒன்பிளஸ் (OnePlus) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனை (OnePlus Nord 6 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. செயலிகளை பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை பயன்படுத்துவது, கேம் விளையாடுவது என ஒரு நாள் முழுவதும் பல தேவைகளுக்கு பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்கு பயன்படுத்தக்கூடிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க




ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் – சிறப்புகள்
இந்த ஸ்மார்ட்போனில் 9000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. அதாவது, தேவைப்படும் பட்சத்தில் இந்த ஸமார்ட்போனை பவர் பேங்க் போல இரண்டு முறை சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது விவோ வி70 FE ஸ்மார்ட்போன்!
விலை மற்றும் இதர அம்சங்கள்
8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.41,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 09, 2026 முதல் இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது இந்த ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால் குறிப்பிட்ட சில வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் நீங்கள் வெறும் ரூ.35,000-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.