அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது விவோ வி70 FE ஸ்மார்ட்போன்!
Vivo V70 FE Smartphone Introduced In India | விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்பொன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ வி70 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது விவோ (Vivo). இதன் காரணமாக இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ வி70 FE ஸ்மார்ட்போனை (Vivo V70 FE Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது விவோ வி70 FE ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ வி70 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், விவோ 70 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒரு தொடர்ச்சியாக உள்ளது. 200 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
இதையும் படிங்க : இனி சுலபமாக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்யலாம்.. கூகுள் வெளியிட்ட அசத்தல் அம்சம்!
விவோ வி70 FE ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Looks that impress. Deals that slay.
Pre-book the all-new vivo V70 FE and unlock the exclusive offers now.#vivoV70FE #PortraitSoPro #SlayEveryDetail pic.twitter.com/FDxvgz3GwG— vivo India (@Vivo_India) April 2, 2026
இந்த விவோ வி70 FE ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் 1.5K OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசசர் அம்சம் உள்ள நிலையில், 12ஜிபி LPDDR5 RAM அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் UFS 3.1 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் உள்ளது.
இதையும் படிங்க : வங்கி கணக்கு காலியாகலாம்… ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.37,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சீரீஸின் டாப் மாடல் ஸ்மார்ட்போனான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி70 FE ஸ்மார்ட்போன் ரூ.44,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.



