AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Un Read Chat Summary.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

Un Read Chat Summary In WhatsApp | வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், Un Read Chat Summary என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Un Read Chat Summary.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Apr 2026 00:32 AM IST

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. ஏராளமான மக்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை முதல் அலுவலங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தர்போது மேலும் ஒரு அசத்தல் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“Un Read Chat Summary” அம்சத்தை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் பலரும் ஏராளமான தொடர்புகளை கொண்டு இருப்பர். தனிப்பட்ட உரையாடல்கள், குழு உரையாடல்கள், குடும்பம், அலுவலகம் என ஏராளமான குறுஞ்செய்திகள் வந்து குவிந்துக்கொண்டே இருக்கும். மிகவும் பிசியான நாட்களில் இந்த அத்தனை குறுஞ்செய்திகளையும் படித்து அவற்றுக்கு பதில் அளிப்பது சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையில் தான் பயனர்களின் வேலையை எளிதாக்க வாட்ஸ்அப் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!

வாட்ஸ்அப் “Un Read Chat Summary” அம்சம் என்றால் என்ன?

ஒருவர் தனது வாட்ஸ்அப் செயலியில் அதிக குறுஞ்செய்திகள் குவிந்து கிடப்பதாக உணரும் பட்சத்தில் அவற்றை மிக விரைவாக படித்து முடிக்க இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ஒரு குழு அல்லது தனி நபரிடம் இருந்து ஏராளமான குறுஞ்செய்திகள் வந்துள்ளது என்றால் அவற்றை ஒரு சம்மரியாக இந்த அம்சம் வழங்கும். தற்போது இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது.

இதையும் படிங்க : டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த அம்சம் விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று வாபீட்டா (WABeta) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us