AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி இரைச்சல் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

WhatsApp New Update On Audio and Video Call | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் புதிய புதிய அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடியோ மற்றும் வீடியோ கால் தொடர்பான புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இனி இரைச்சல் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Apr 2026 22:07 PM IST

உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. ஏராளமான மக்கள் தங்களது தனிப்பட்ட தேவைகள், பணி, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, அந்த நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு அசத்தலான அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் உள்ள குறுஞ்செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட வசதிகளை ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றை பொதுமக்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும்போது அதில் இரைச்சல்களை நீக்கி தெளிவான குரல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : 7,000 mAh பேட்டரி.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன்!

இரைச்சல் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்

தற்போதைய நிலவரப்படி பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள வாட்ஸ்அப் அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்த ஆடியோ மற்றும் வீடியோ கால்களை பேசும்போது சுற்றி நடைபெறும் சம்பவங்களின் சத்தமும் இணைந்து கேட்கும். குறிப்பாக சாலை ஓரங்களில் நின்று பேசும்போதோ அல்லது பேருந்து, ரயில்களில் பயணம் செய்தாலோ இந்த இரைச்சல் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க : வீடும் கூலாக இருக்க வேண்டும்… மின் கட்டணமும் குறைய வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

இந்த இரைச்சல் சிக்கலை கருத்தில் கொண்டு தான் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. அதாவது பயனர்கள் இரைச்சல் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வகையில் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாகவும், அது மிக விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களின் பயன்பாட்டுக்கும் வர உள்ளது என்று வாட்ஸ்அப் குறித்த தகவல்கள் மற்றும் அப்டேட்களை வெளியிடும் WABetaInfo தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us