AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய தோற்றத்துடன் அறிமுகமாகும் பஜாஜ் பல்சர் 180 பைக் – அப்படி என்ன ஸ்பெஷல்?

Pulsar 180 New Launch : பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பைக்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் 180 பைக் ஷோ ரூமில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த பைக்கின் ஸ்பெஷாலிட்டி குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதிய தோற்றத்துடன் அறிமுகமாகும் பஜாஜ் பல்சர் 180 பைக் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Mar 2026 17:51 PM IST

நாட்டின் புகழ்பெற்ற பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, தனது அடையாளங்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் 180 பைக்கை மீண்டும் புதிய தோற்றத்துடன் இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வர தயாராகியுள்ளது.  இதுதொடர்பாக நிறுவனத்தின் சார்பாக வெளியான அறிக்கையின் படி, இந்த புதிய பஜாஜ் பல்சர் 180 பைக் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  இது இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதற்கான சாட்சியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. பல்சர் பைக் பொதுவாக அதன் செயல்திறனுக்காக வாடிக்கையாளர்களால் நினைவுகூறப்படுகிறது. குறிப்பாக இந்த பைக் இளைஞர்களிடையே மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

புதிய தோற்றத்துடன் அறிமுகமாகும் பஜாஜ் பல்சர் 180 பைக்

இதுதொடர்பாக ஷோரூம் ஒன்றில் காட்சிபடுத்தப்பட்ட புதிய பல்சர் 180 பைக்கில் பழைய அடிப்பைடை டிசைனில் எந்த மாற்றமும் செய்யமால் பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் அப்டேட் டசெய்யப்பட்ட பஜாஜ் 150 பைக்கை போன்று இது காணப்படுகிறது. இந்த பைக் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. அது இந்த பைக்கிற்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக்கை வழங்குகிறது.

இதையும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!

மேலும் இதன் கம்பீரமான பெட்ரோல் டேங்க், ஸ்டைலான பக்கவாட்டு பேனல்கள், பின் பகுதியில் ஷார்ப்பான வடிவமைப்பு ஆகியவை இதன் ஸ்பெஷலாக பார்ககப்படுகிறது. மேலும் பைக்கின் பின் பகுதியில் 180 என்ற பேட்ஜ் தெளிவாக தெரியும்படி 2டி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் ஸ்பெஷலாக அதன் பின்பக்க டிஸ்க் பிரேக், 17 இஞ்ச் அலாய் வீல், பெரிய அளவிலான கருப்பு நிற எக்ஸாஸ்ட் ஆகிய அனைத்தும் பைக்கிற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக இதன் எக்ஸாஸ்ட் அமைப்பு, பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது. இது பைக்கின் ஸ்போர்ட்டியான லுக்கை மேலும் கூட்டுகிறது.

இதையும் படிக்க : Honda SP 125 vs Bajaj Pulsar 125: தினசரி அலுவலகப் பயணத்திற்கு எந்த பைக் மிகச்சிறந்த தேர்வு?

இந்த புதிய பஜாஜ் பல்சர் 180 பைக்கில் அதே 178.6சிசி திறன் கொண்ட ஏர் கூலிங் எஞ்சின், இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் இ20 பெட்ரோலுக்கு ஏற்ற வகையில் இந்த எஞ்சினில் சில அப்டேட்கள் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய மாடலில் இந்த எஞ்சின் 17 ஹார்ஸ் பவரையும், 14.2Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். தற்போது வெளியாகவிருக்கும் மாடலும் அதே செயல்திறனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓட்டுநரின் அனுபவத்தை மேம்படுத்த 5 ஸ்பீட் கியர்பாக்ஸை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.  இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us