Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பட்ஜெட் 2026 .. மின்சார வாகன துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள்!

Expectations of E Vehicle Industry | 2026 மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், மின்சார வாகன துறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jan 2026 23:49 PM IST
2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனவரி 28, 2026 அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மின்சார வாகன துறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
2026 மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை வேகப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மின்சார வாகன உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

2 / 5
மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள், உதிரிபாகங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் இந்த துறையின் முக்கிய எதிர்ப்பார்ப்புகளாக உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்வதை குறைத்து இந்தியாவிலேயே பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க இந்த பட்ஜெட் வழிவகை செய்யுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3 / 5
வெளிநாடுகளில் இருந்து பேட்டரிகள், உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதை குறைக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் செலவிடப்படும் அன்னிய செலாவணியை சேமிக்க முடியும். இது மின்சார வாகன துறையின் வளர்ச்சியையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த உதவும். 

4 / 5
சிறிய மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி ஏற்கனவே 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு இருந்தாலும், மூலப்பொருட்களுக்கான வரியை சீரமைப்பதின் மூலம் வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்த எதிர்ப்பார்ப்புகள் பட்ஜெட்டில் வெளியாகுமா என்பது தான் இந்த துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

5 / 5