AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் மெசேஜ்கள் ரகசியமாக படிக்கப்படலாம் – வாட்ஸ்அப் மீது டெலிகிராம் சிஇஓ குற்றச்சாட்டு

WhatsApp Privacy Alert : வாட்ஸ்அப் செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவில்லை, உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் ரகசியமாக படிக்கப்படலாம் எனவும் டெலிகிராம் நிறுவன சிஇஓ பாவெல் துரோம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் மெசேஜ்கள் ரகசியமாக படிக்கப்படலாம் – வாட்ஸ்அப் மீது டெலிகிராம் சிஇஓ குற்றச்சாட்டு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Apr 2026 15:18 PM IST

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மற்றொரு சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனர் மற்றும் சிஇஓவுமான பாவெல் துரோம், வாட்ஸ்அப் செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களை ரகசியமாக படிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது,  அந்த செயலி  எண்ட் டு எண்ட் டிஸ்கிரிப்ஷன் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்குகிறது என்று கூறினாலும், உண்மையில் பயனர்கள் அனுப்பும் தனிப்பட்ட செய்திகள் படிக்கப்படலாம் என்றும், சில நேரங்களில் பிற நிறுவனங்களுடனும் பகிரப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்  இது பயனர்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி எனவும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க : உங்கள் வாட்ஸ்அப் டேட்டா அழியாமல் பாதுகாக்க வேண்டுமா? இந்த எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதரவாக எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க்கும்  கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் வாட்ஸ்அப்பை முழுமையாக நம்ப முடியாது என்றும், அதன் பயனர்கள் மாற்று சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் மீது டெலிகிராம் சிஇஓ குற்றச்சாட்டு

 

ஆனால், மெட்டா நிறுவனம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, வாட்ஸ் அப் நிறுவனம், பயனர்களின் செய்திகள் எண்ட் டு எண்ட் டிஸ்கிரிப்ஷன் செய்யப்பட்டுள்ளதால்,  மெசேஜை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் தவிர யாரும் அந்த தகவல்களை பார்க்க முடியாது என விளக்கமளித்துள்ளது.

வாட்ஸ்அப் மீீது தொடரப்பட்ட ஒரு வழக்கு தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. அந்த வழக்கில் வாட்ஸ்அப் ஊழியர்கள், பிற நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை அனுப்பியிருக்கலாம் என்ற குற்ற்ச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அது தான் தற்போது பெரிய சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க :  ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாத தவறுகள்!

இது பயனர்களின் பிரைவசி, தகவல் பாதுகாப்பு, நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மை ஆகியவை மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது. வேலை, கல்வி என அனைத்துக்கும் நம்மில் பலரும் வாட்ஸ்அப்பை நம்பியிருக்கிறோம். முக்கியமான தகவல்கள் ஆவணங்கள் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படுகின்றன. இந்த நேரத்தில் டெலிகிராம் சிஇஓவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us