ஏப்ரல் 15-ல் அசத்தலான் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஓப்போ!
Oppo F33 Series Smartphones To Launch On April 15 | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 15, 2026 அன்று தனது ஓப்போ எஃப் 33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஓப்போ (Oppo). இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓப்போ எஃப் 33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo F33 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஓப்போவின் இந்த எஃப் 33 சீரீஸ் வரிசையில் என்ன என்ன ஸ்மார்ட்போன்கள் இடம்பெற உள்ளன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஃப் 33 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்
ஓப்போ நிறுவனம் தனது எஃப் 33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 15, 2026 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சீரீஸில் மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஓப்போ அறிவித்துள்ளது. அதாவது, ஓப்போ எஃப் 33 (Oppo F33) மற்றும் ஓப்போ எஃப் 33 ப்ரோ (Oppo F33 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் தான் அவை. இந்த ஸ்மார்ட்போன்களை ஓப்போ மிகவும் உறுதியானவையாகவும், நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாகவும் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இனி இன்ஸ்டாகிராமில் கமெண்டுகளை சுலபமாக எடிட் செய்யலாம்.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
ஓப்போ எஃப் 33 சீரீஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஓப்போ எஃப் 33 சீரீஸில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன்கள் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 80 வாட்ஸ் Super VOOC Flash Charging அம்சத்தையும், தினசரி பயன்பாட்டுக்கு நீடித்து உழைக்கும் தன்மையையும் கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்துடன் கூடிய 50 மெகாபிசல் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கூகுள் பேயின் ‘PocketMoney’ அம்சம்… ஆபத்தானதா? உண்மை என்ன..?
இந்த ஓப்போ எஃப் 33 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் SoC அம்சத்தை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000-க்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மிஸ்டி ஃபாரஸ்ட், ஸ்டார்ரி ப்ளூ மற்றும் பேஷன் ரெட் ஆகிட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 15, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன.



