AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார் ஏசியை பாதுகாக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Follow These Tips To Protect Your Car | காரின் உள்ள ஏசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. கார் ஏசி பராமரிப்பில் செய்யக்கூடிய சிறிய தவறுகள் கூட அதன் செயல்திறனை பெரிய அளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளது.

கார் ஏசியை பாதுகாக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Apr 2026 21:42 PM IST

வீட்டில் ஏசி எவ்வளவு முக்கியமானதாக உள்ளதோ அதேபோல தான் கார்களிலும் ஏசி மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம், சாலைகளில் பயணம் செய்யும்போது சுற்றுசூழல் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியேறு வெப்பமான காற்று ஆகியவை இணைந்து காருக்குள் அதிக வெப்பத்தை உருவாக்கும். இந்த நிலையில், வெப்பத்தை குறைக்க ஏசி மிகவும் அவசியமானதாக உள்ளது. இவ்வாறு கார் ஏசி முக்கியமானதாக உள்ள நிலையில், அடிக்கடி கார் ஏசி பழுதடைவதை பலர் எதிர்க்கொள்வர். இந்த நிலையில், அடிக்கடி கார் ஏசி பழுதடையாமல் அதனை ஸ்மார்டாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு சர்வீஸ் செய்வது

பெரும்பாலானவர்கள் காருக்குள் இருக்கும் ஏசியை கண்டுக்காமலே விட்டுவிடுவர். இதன் காரணமாக தான் ஏசி எதிர்பாராத நேரங்களில் பழுதாகும். இந்த நிலையில், குறிப்பிட்ட கிலோமீட்டர்களுக்கு கார் ஓடிய பிறகு அதில் இருக்கும் ஏசியை பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்யும்போது ஏதேனும் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்பு இருந்தால் அது முன்கூட்டியே தெரிய வரும்.

இதையும் படிங்க : ஏப்ரல் 15-ல் அசத்தலான் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஓப்போ!

ஏசியின் ஏர் ஃபில்டரை கவனிக்க வேண்டும்

ஏசியில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக அதன் ஏர் ஃபில்டர் உள்ளது. அதனை அடிக்கடி பழுது அடையாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கார் ஏசியின் ஆயுளை அதிகரிக்க உதவும். அவ்வாறு நீங்கள் ஏசியை நீண்ட நாட்களுக்கு கவனிக்காமல் விடும் பட்சத்தில் அதில் அழுக்கு மற்றும் தூசி படிந்து மிகவும் அசுத்தமான காற்றை தான் உங்களுக்கு வழங்கும்.

கார் இஞ்சினை இயக்கிய பிறகே ஏசியை ஆன் செய்ய வேண்டும்

பெரும்பாலான நபர்கள் முதலில் ஏசியை ஆன் செய்த பிறகு கார் இஞ்சினை இயக்குகின்றனர். அது முற்றிலும் தவறு. முதலில் கார் இன்ஜினை ஆன் செய்த பிறகு தான் காரின் ஏசியை ஆன் செய்ய வேண்டும். அதேபோல ஏசியை ஆஃப் செய்த பிறகே கார் இன்ஜினை  ஆஃப் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : உங்கள் மெசேஜ்கள் ரகசியமாக படிக்கப்படலாம் – வாட்ஸ்அப் மீது டெலிகிராம் சிஇஓ குற்றச்சாட்டு

ஏசியின் வெப்பநிலை

ஏசியை ஆன் செய்ததுமே எடுத்த எடுப்பிலே ஏசியை குளிர்ச்சி நிலைக்கு கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு செய்யும்போது ஏசி ஆன் செய்த உடனே அதிக அழுத்தம் ஏற்பட்டு பழுதடைய வாய்ப்பு உள்ளது.

Follow Us