AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து கவலை இல்லை.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

WhatsApp May Introduce Business Chat Filtering Option | வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பிசினஸ் சாட் ஃபில்டரிங் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து கவலை இல்லை.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Apr 2026 23:53 PM IST

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. என்னதான்  வாட்ஸ்அப் ஒரு சிறந்த செயலியாக அறியப்பட்டாலும் அதில் சில சிக்கல்கள் இருப்பது குறித்து பயனர்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் அந்த நிறுவனம் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.  இந்த நிலையில், ஸ்பேம் குறுஞ்செய்திகளை (Spam Messages) குறைக்கும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம்  செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிசினஸ் சாட் ஃபில்டரிங் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் தங்களது தனிப்பட்ட தேவைகள் உள்ளிட்ட பல தேவைகளுக்காக வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது, செயலிகளை பயன்படுத்தும்போது வாட்ஸ்அப் எண் கொடுக்கப்படும் பட்சத்தில் அந்த எண்ணுக்கு நிறுவனங்கள் தொடர்ந்து அப்டேட்கள் மற்றும் ஆஃபர்களை அறிவிக்க குறுஞ்செய்தி அனுப்பும். இது வாடிக்கையாளர்கள் தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடைகள் மேற்கொள்ளும் முயற்சியாக உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் அது அவ்வாறு இருப்பதில்லை.

இதையும் படிங்க : தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம்.. ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இவ்வாறு நிறுவனங்கள் மற்றும் செயலிகளிடம் இருந்து தொடர்ந்து வரும் குறுஞ்செய்திகளை கையாள ஃபில்டரிங் (Filtering) அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் பயனர்களுக்கு வரும் வணிக ரீதியான குறுஞ்செய்திகள் தனியாக ஒரு பட்டியலுக்குள் சென்றுவிடும். பயனர்கள் வேண்டும் என்றால் அந்த பட்டியலில் என்ன என்ன குறுஞ்செய்தி உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : சம்மரில் போன் அதிகம் வெப்பமடையும் பிரச்னையா? தவிர்க்க இதை பண்ணுங்க!

ஒருவேளை பயனர்களுக்கு அந்த பட்டியலில் உள்ள குறுஞ்செய்திகளை படிக்க விருப்பம் இல்லை என்றால் அவர்கள் தங்களது தனிப்பட்ட குறுஞ்செய்திகளில் கவனம் செலுத்தலாம். இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us