AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்மரில் போன் அதிகம் வெப்பமடையும் பிரச்னையா? தவிர்க்க இதை பண்ணுங்க!

How To Reduce Phone Heating Issues : பலரும் கோடைகாலங்களில் ஸ்மார்ட்போன்கள் அதிக வெப்பமடையும் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். போன் அதிக வெப்பமடைந்தால் அதன் செயல்திறன் பாதிப்பதோடு, வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த பிரச்னைகளை எளிமையாக சமாளிக்க இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சம்மரில் போன் அதிகம் வெப்பமடையும் பிரச்னையா? தவிர்க்க இதை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Apr 2026 21:17 PM IST

வெயில் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக வெப்பம் காரணமாக ஸ்மார்ட்போன்கள் வேகமாக சூடாகும் பிரச்னையை பலரும் சந்தித்து வருகின்றனர். இது போனின் செயல்திறனை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பேட்டரி ஆயுளையும் பாதிக்கக்கூடும். எனவே போன் அதிகமாக வெப்பமடையாமல் பாதுகாக்க சில எளிய முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. இந்த கட்டுரையில் போன் வெப்பமடையாமல் காக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சம்மரில் போன் அதிகம் வெப்பமடையும் பிரச்னையா?

முதலில் நம் ஸ்மார்ட்போனின் பிரைட்நஸ் அளவை குறைப்பது மிகவும் முக்கியம். காரணம், போனின் பிரைட்னஸ் அதிகமாக இருக்கும்போது அது அதிக அளவு பேட்டரி பவரை எடுத்துக்கொள்கிறது. இதனால் நம் ஸ்மார்ட்போன் விரைவாக சூடாகிறது. இதனை தவிர்க்க பிரைட்னஸை குறைவாக வாத்திருப்பது நல்லது.

இதையும் படிக்க : சார்ஜரில் உள்ள R குறியீட்டை என்ன தெரியுமா? போன் பாதுகாப்புக்கு இது முக்கியம்

மேலும் நம் ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தாத புளுடூத், வைஃபை, ஜிபிஎஸ், மொபைல் டேட்டா போன்ற ஆப்சன்களை பயன்படுத்தாத போது அதனை ஆஃப் செ்யவது நல்லது. அதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது பேட்டரி பவரை விரைவாக காலி செய்யும்.  இதனால் உங்கள் போன் சூடாகலாம்.

போன் அதிகமாக சூடாகும் போது குறிப்பாக வெயில் நேரங்களில் செல்லும்  தேவையற்ற நேரங்களில் அதில் Airplane mode-ல் பயன்படுத்துவது நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது. இது அனைத்து நெட்வொர்க் கணெஷக்ஷன்களையும் குறைத்து போனுக்கு ஓய்வளிக்கும். குறிப்பாக குறைவான சிக்னல் உள்ள இடங்கள், சிக்னல் கிடைக்காத இடங்களில் இது அதிக பயனளிக்கும்.

மேலும் போனை அதிக நேரம் சார்ஜ் செய்யக்கூடாது. குறிப்பாக 100 சதவிகிதம் சார்ஜ் ஆனதும் உடனே சார்ஜரை அகற்ற வேண்டும். இல்லை என்றால் அதிக சார்ஜ் காரணமாக போனின் வெப்பம் அதிகரித்து, உட்புற பாகங்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது ஃபாஸ்ட் சார்ஜர் விற்கப்படும் நிலையில், பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப சார்ஜ் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் ஃபோல்டு.. முக்கிய அம்சங்கள்!

மேலும் நாம் பயன்படுத்தும் போனின் பேக் கவர் கூட போன் அதிக வெப்பமடைய காரணமாக இருக்கலாம். குறிப்பாக தடிமனான பேக் கவர் போனை அதிக வெப்பமடைய செய்யும். இதனால் வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் பேக் கவர் பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் உங்கள் போனில் இருந்து வெப்பம் வெளியேற உதவும்.

வெயில் நேரங்களில் நேரடியாக வெயில் படும்படி போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிக வெயில் நேரங்களில் கேம் விளையாடுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. இது போனின் வெப்பநிலையை அதிகரித்து இது போனின் செயல்திறனை பாதிக்கும்.

வெயில்காலத்தில் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், போன் அதிகமாக சூடாகும் பிரச்சனையை தவிர்த்து, அதன் செயல்திறனை நீண்ட காலம் பாதுகாக்கலாம்.

Follow Us