AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அசத்தல் அம்சங்கள்.. ஆனால் பட்ஜெட் விலை.. இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்!

Realme Narzo 100 Lite 5G Smartphone Introduced In India | ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அசத்தல் அம்சங்கள்.. ஆனால் பட்ஜெட் விலை.. இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்!
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Apr 2026 16:19 PM IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக ரியல்மி (Realme) உள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரியல்மி நிறுவனமும் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மர்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை (Realme Narzo 100 Lite 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி தனது நார்சோ 100 வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வரிசையில் முதல் ஸ்மார்ட்போனாக இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸமார்ட்போனில் 7,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 13 மெகாபிக்சல் பிரைமரி கேமாராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21, 2026 முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : சாட்ஜிபிடியை நம்பி தவறாக நடந்துகொண்ட முன்னாள் காதலர் – ஓபன்ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெண்

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 720*1570 பிக்சல் கொண்ட 6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபிம் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2டிபி வரை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

இதையும் படிங்க : புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாரண்டி கிடையாது.. ஆப்பிளின் இந்த ரூல் உங்களுக்கு தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போனை 10 மணி நேரம் வரை வீடியோ பார்க்க, 70 மணி நேரம் வரை பாடல் கேட்க, 11 மணி நேரம் வரை குறுஞ்செய்திகளை அனுப்ப, 34 மணி நேரம் வரை போன் கால் மற்றும் 12 மணி நேரம் வரை கேமிங் என ஒருமுறை சார்ஜ் செய்தாலே இத்தனை செயல்களை செய்ய முடியும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,499-க்கு அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us