டவர் கூலர் vs பெர்சனல் கூலர் vs டவர் கூலர் – வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Air Cooler Guide : நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சந்தையில் டவர் கூலர், பெர்சனல் கூலர், டிசர்ட் கூலர் என 3 வகையில் ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலர்ஸ்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தையில் பல்வேறு வகையான ஏர் கூலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில் டவர் கூலர், பெர்சனல் கூலர், டவர் கூலர் ஆகியவை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வகைகளாகும். இருப்பினும், இவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். இம்மூன்றும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், குளிரூட்டும் செயல்திறன், மின் நுகர்வு மற்றும் பயன்பாட்டு நோக்கம் ஆகியவற்றில் இவை வேறுபடுகின்றன.
தவறான கூலரைத் தேர்ந்தெடுப்பது போதுமான பலனை தராதது மட்டுமல்லாமல், மின் கட்டணம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, கூலரை வாங்குவதற்கு முன், அவற்றுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
டிசர்ட் கூலர்
டிசர்ட் கூலர் (Desert Cooler) என்பது ஏர் கூலர்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த வகையாகக் கருதப்படுகிறது. அதிகப்படியான குளிர் தேவைப்படும் பெரிய அறைகள் மற்றும் கூடங்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய வாட்டர் டேங்க்கையும், அதிக அளவு குளிர்ந்த காற்றையும் வழங்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த ஃபேனையும் கொண்டுள்ளது. வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட பகுதிகளில் இது மிகவும் திறம்படச் செயல்படுகிறது.




இதையும் படிக்க : சர்வீஸ் செய்த பிறகும் ஏசியில் கூலிங் கிடைக்கலையா? இந்த பிரச்னையாக இருக்கலாம் – எச்சரிக்கும் நிபுணர்கள்
இருப்பினும், இது பெரிய மோட்டாரையும், அதிக வேகத்தில் காற்றை வீசும் அமைப்பையும் பயன்படுத்துவதால், மற்ற இரண்டு வகை ஏர் கூலர்களை விட இதன் மின் நுகர்வு அதிகமாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய அறையில் வசிப்பவராகவோ அல்லது கடும் வெப்பம் நிலவும் பகுதியில் இருப்பவராகவோ இருந்தால், இது ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், இது அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பெர்சனல் கூலர் என்றால் என்ன?
பெர்சனல் கூலர் (Personal Cooler) என்பது சிறிய அறைகளுக்காகவோ அல்லது தனி ஒரு நபர் பயன்படுத்துவதற்காகவோ வடிவமைக்கப்பட்டதாகும். இது குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டுமே குளிரூட்டும் திறன் கொண்டதுl. மேலும் இது குறைந்த அளவே மின்சாரத்தை நுகர்கிறது. இது சிறிய வாட்டர் டேங்க்கையும், குறைந்த திறன் கொண்ட ஃபேனையும் கொண்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் மிதமான குளிரூட்டலை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும், பெரிய அறைகளுக்கு இது ஏற்றதாக இருக்காது. பெரிய அறைகளில் இதைப் பயன்படுத்தினால், போதிய அளவு காற்று கிடைக்காது. இதன் மிக முக்கியமான நன்மைகள், அதன் எனர்ஜி சேமிப்பு திறன், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடிய வசதி ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.
இதையும் படிக்க : வீடும் கூலாக இருக்க வேண்டும்… மின் கட்டணமும் குறைய வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
டவர் கூலர் என்றால் என்ன?
டவர் கூலர், குறைந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் நவீன வடிவமைப்பு கொண்ட குளிரூட்டும் சாதனங்களாகக் கருதப்படுகின்றன. அவை மெல்லிய தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, வீட்டின் சிறிய அறைகளில் இயல்பாகப் பொருந்திவிடுகின்றன. குறைந்த இடவசதி கொண்ட வீடுகளுக்கும், வாடகை வீடுகளுக்கும் இவை ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இவற்றின் குளிரூட்டும் திறன் மிதமானது, எனவே இவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்குப் பொருத்தமானவை. இவற்றின் மின் நுகர்வு, தனிநபர் கூலர்களுக்கு இணையானது, ஆனால் டெசர்ட் கூலர்களை விடக் குறைவானது. இவை சிறந்த காற்றை வழங்குவதால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் திறம்படப் பரவுவதை உறுதி செய்கின்றன.
ஒரு ஏர் கூலரை வாங்குவதற்கு முன், அறையின் அளவு, சுற்றுப்புற வெப்பநிலை அளவுகள் மற்றும் மின்சார நுகர்வுத் தேவைகள் ஆகியவற்றை ஒருவர் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். பெரிய அறைகளுக்கு டெசர்ட் கூலர் ஒரு சிறந்த தேர்வாகும், அதேசமயம் சிறிய அறைகளுக்கு பர்சனல் அல்லது டவர் கூலர் மிகவும் பொருத்தமானது. வாட்டர் டேங்க் கொள்ளளவும் ஒரு முக்கிய காரணியாகும், ஏனெனில் ஏர் கூலர் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக இயங்க முடியும் என்பதை அதுவே தீர்மானிக்கிறது.