யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களால் தொல்லையா? இனி அந்த பிரச்னை இல்லை – வந்தாச்சு புது அப்டேட்
YouTube Shorts Update : டிஜிட்டல் உலகில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் நம் நேரத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் முக்கிய காரணமாக மாறிவிட்டன. இதனால் மக்கள் தங்கள் நேரம் வீணாவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த யூடியூப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் நம் நேரத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் முக்கிய காரணமாக மாறிவிட்டன. குறிப்பாக யூடியூப் ஷார்ட்ஸ் பலரையும் அதிக நேரம் ஸ்க்ரோல் செய்யும் ஒரு பழக்கமாக மாறியுள்ளது. இதனால் ஸ்கிரோல் செய்தபடி அதிக நேரம் நம் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களில் செய்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதற்கு அடிமையாக மாறி வருகின்றனர். இந் நிலையில் இதனை கட்டுப்படுத்த யூடியூப் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களால் தொல்லையா?
இந்த புதிய அப்டேட்டின் படி பயனர்கள் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை முழுமையாக கட்டுப்படுத்தவும், தேவையெனில் முற்றிலும் நீக்கவும் முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஷார்ட்ஸ் அம்சம் காரணமாக நாம் நேரம் வீணாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் யூடியூப் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மக்களிடையே இந்த அம்சம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிக்க : சாட்ஜிபிடியை நம்பி தவறாக நடந்துகொண்ட முன்னாள் காதலர் – ஓபன்ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெண்
இந்த புதிய ஷார்ட்ஸ் ஃபீட் லிமிட் என்ற அம்சத்தின் அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாதக இந்த அம்சத்தின் மூலம் 15 நிமிடங்களுக்கு மட்டுமே வரம்பை நிர்ணயிக்க முடிந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை 0 வரை குறைக்கும் புதிய ஆப்சன் நமக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஷார்ட்ஸ் வீடியோக்களை முழுமையாக பார்க்காமல் தவிர்க்க முடியும்.
இந்த ஆப்சனைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு ஷார்ட்ஸ் பகுதி காட்டப்படாது. பயனர் ஷார்ட்ஸ் வீடியோ பார்க்க முயன்றால், நீங்கள் உங்கள் அதிகபட்ச வரம்பை அடைந்துவிட்டீர்கள் என்ற அறிவிப்பு தோன்றும். ஆனால் நீங்கள் இந்த அறிவிப்பை புறக்கணிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் படிக்க : உங்கள் மெசேஜ்கள் ரகசியமாக படிக்கப்படலாம் – வாட்ஸ்அப் மீது டெலிகிராம் சிஇஓ குற்றச்சாட்டு
ஆனால் கூகுள் ஃபேமிலி லிங்க் எனப்படும் பெற்றோர் கண்காணிப்பில் யூடியூப் பயன்படுத்தும் குழந்தைகளின் கணக்குகளில் இந்த ஆப்சன் கடுமையாக செயல்படுத்தப்படும். இந்த ஆப்சனை பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் குழந்தைகளால் ஷார்ட்ஸ் பார்க்கவே முடியாது. இது குழந்தைகளின் ஸ்கீரின் டைமை குறைக்க இது உதவும்.
இந்த ஆப்சனை எப்படி தேர்ந்தெடுப்பது?
இந்த ஆப்சனை தேர்ந்தெடுக்க விரும்பும் பயனர்கள் தங்கள் யூடியூப் பக்கத்திற்க சென்று அதில் Settingsக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கு Time Management Dashboard என்பதைத் தேர்வு செய்து Shorts Feed Limit என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 0 என்பதைத் தேர்வு செய்தால் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்ப்பதை தவிர்க்கலாம்.