Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இலவச AI வசதியுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..

Free laptop: கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் Dell, Acer, HP போன்ற நிறுனங்களின் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. அதோடு, Intel i3, AMD Ryzen 3 பிராஸசர், 8GB ரேம், 256GB SSD, Windows 11, MS Office ஆகியவற்றை இந்த லேப்டாப்கள் கொண்டுள்ளன.

இலவச AI வசதியுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Jan 2026 12:33 PM IST

சென்னை, ஜனவரி 04: தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் (LAPTOP) வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அந்தவகையில், அரசு பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக லேப்டாப் வழங்குகப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக அரசு கடந்த 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் மும்மூரம் காட்டி வருகிறது. அந்தவகையில், லேப்டாப் திட்டமும் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியாகும். அதாவது, வாக்குறுதி எண் 163-ல், டேப்லெட் மற்றும் 10GB டேட்டா கொடுப்போம் என கூறியிருந்தது. எனினும், ஆட்சிக்கு வந்த இத்தனை ஆண்டுகள் அமல்படுத்தாத்தை கடைசி 2 மாதங்களில் அமல்படுத்த முனைவதாக திமுக மீது பாஜகவும், அதிமுகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும் படிக்க: “ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

2025 பட்ஜெட்டில் லேப்டாப் அறிவிப்பு:

முன்னதாக, தமிழக அரசு 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி, டேப் (TAB) அல்லது லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. அதோடு, இந்த திட்டத்திற்காக மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அதன்படி, பல்வேறு நிறுவனங்களின் டெண்டர் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது ஹெச்.பி,(HP) டெல்,(Dell) ஏசர் (Acer) ஆகிய மூன்று நிறுனங்களுக்கு லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை கடந்த அக்டோபர் இறுதியில் வழங்கப்பட்டது.

3 நிறுவனவங்களுக்கு ஆர்டர் கொடுத்த அரசு:

குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை வழங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு உள்ளது. அதன் காரணமாகவே, 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்திற்கு இந்த ஆணையை வழங்கினால், அவர்கள் லேப்டாக்களை உற்பத்தி செய்து விநியோக்க காலதாமதம் செய்யலாம் எனக் கருதிய அரசு, இந்த ஆர்டரை 3 நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!

அதன்படி, 3 நிறுவனங்களும் உடனடியாக உற்பத்தியை தொடங்கின. தொடர்ந்து, உற்பத்தி முடிந்து லேப்டாப்கள் வரவர மாணவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

லேப்டாப்பில் இவ்வளவு வசதிகளா?:

அந்தவகையில், கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் Dell, Acer, HP போன்ற நிறுனங்களின் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. அதோடு, Intel i3, AMD Ryzen 3 பிராஸசர், 8GB ரேம், 256GB SSD, Windows 11, MS Office ஆகியவற்றை இந்த லேப்டாப்கள் கொண்டுள்ளன. குறிப்பாக, Perplexity AI வசதி 6 மாத இலவச சந்தாவுடன் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது.