Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil mahesh about teachers protest: இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததைத்தான் ஆசிரியர்கள் கேட்டு வருவதாகவும், அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் என்றும், இவ்விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.

“ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!
அமைச்சர் அன்பில் மகேஷ்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Jan 2026 11:15 AM IST

சென்னை, ஜனவரி 03: இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என்றும், அவர்களின் போராட்டம் நியாயமானது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம், 16 ஆண்டுகளாக நீடிக்கும் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க சங்கத்தினர் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களாக அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபடுவதும், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்வதும், பின்னர் மாலையில் தொலை தூரங்களில் கொண்டு சென்று விடுவதுமாக இருந்து வருகிறது. எனினும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் இம்முறை விடப்பாடியாக இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: “எங்களிடம் 30 லட்சம் வாக்குகள் உள்ளது”.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கொதிப்பு!!

எனது குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள்:

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள், இன்று நடக்கவிருக்கும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படும் என்றார். அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழக முதல்வருடன் கூட நேற்று திருச்சியிலிருந்து திரும்பும் போது இந்த விவகாரம் தொடர்பாக பேசினேன். அதில், அவர்கள் தெரிவித்த கருத்துகளை நினைவுப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய விஷயங்களை நான் எடுத்துரைத்துள்ளேன் என்றார்.

ஆசிரியர்கள கோரிக்கை குறித்து இன்று ஆலோசனை:

மேலும் பேசிய அவர், பழைய ஓய்வூதியம் குறித்த விவகாரத்தில், இன்று எங்களின் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திற்கு முதல்வரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக் கூட்டம் முடிந்தவுடன், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து மேலதிக விவாதம் நடைபெறும் என்று தெரிவித்தார். அதோடு, இதற்கு முன்பு, நிதித்துறையுடன் பேசியபோது, அவர்கள் சில வாதங்களை முன்வைத்தனர். அதனை தெளிவுபடுத்தும் வகையில், இன்றும் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை அறியலாம் என்றார்.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை தான் கேட்கின்றனர்:

அதன் தொடர்ச்சியாக, பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி, ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, நாங்கள் அதிகாரிகளிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளோம். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தேவையான விளக்கங்களையும் வழங்கி வருகிறோம்.

இதையும் படிக்க: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?

இறுதியாக, அவர்கள் எடுக்கும் முடிவு ஒரு நல்ல தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலையை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த சம்பள விவகாரம் தீர்க்கப்படும் என்றும், அடுத்த ஊதிய காலத்தில் அதற்கான நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.