இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம் – வெளியான புது அப்டேட்
Whatsapp Recharge : இனி நம் மொபைலை ரீசார்ஜ் செய்வதற்காக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி நேரடியாக, சில வினாடிகளில் உங்கள் ரீசார்ஜ் செயல்முறையை நீங்கள் எளிதாக முடித்துவிடலாம். இதற்காக வாட்ஸ்அப் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
உங்கள் மொபைல் போனை ரீசார்ஜ் செய்ய இனி இனி பேடிஎம், கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளுக்கு செல்ல தேவையில்லை. வாட்ஸ்அப்பில் இருந்தபடியே நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். பீரிபெய்டு கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்காக ஒரு புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா போன்ற எந்த நெட்வொர்க்கை நீங்கள் பயன்படுத்தினாலும். உங்கள் சிம் கார்டை எளிதாக வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய முடியும். யுபிஐக்கான QR கோட்களை ஸ்கேன் செய்தல், பணப்பரிமாற்றம் மேற்கொள்ள, பிற கணக்குகளில் இருந்து நீங்கள் பணம் பெற போன்ற வசதிகளை வாட்ஸ் அப் ஏற்னகவே அறிமுகப்படுத்தியிரிருந்தது. அந்த வகையில் தற்போது செல்போன் ரீசார்ஜ் செய்யும் வசதியையும் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது.
இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம்
முன்னதாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருந்தத குறிப்பிடத்தக்கது. இந்த ரீசார்ஜ் வசதியை பயனர்களுக்கு வழங்குவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது PayU என்ற நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியிுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு இயங்குதளங்கள் வாயிலாகவும் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும் என மெட்டா இந்தியாவின் இயக்குநர் ரவி கார்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?




வாட்ஸ்அப்பின் ஹோம் ஸ்கிரீனில் நேரடியாக ரூபாய் குறியீட்டைக் காட்டும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் படி இனி வரும் காலங்களில் ரீசார்ஜ் செய்வதற்காக வாட்ஸ்அப் பயனர்கள் வேறு செயலிகளுக்கு மாற வேண்டிய அவசியமிருக்காது. அதற்கு பதிலாக வாட்ஸ்அப்பில் இருந்த படியே நேரடியாக பணம் செலுத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்கள் சில விநாடிகளிலையே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என அவர் தெளிவு படுத்தினார்.
இதையும் படிக்க : ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இதன் மூலம் நேரம் மிச்சமாவதாகவும், பயனர்கள் தங்கள் சாட் செய்த படியே எவ்வித தடையும் இன்றி ரீசார்ஜ் செய்து விட முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இதன் விளைவாக மொபைல் ரீசார்ஜ் செய்வதற்காக இனி வேறு செயலிகளையோ இணையதளங்களையோ நாட தேவையில்ல்லை. இதன் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் மெல்ல ஆல் இன் ஒன் செயலியாக மாறி வருகிறது. குறிப்பாக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு சூப்பர் ஆப்பாக வாட்ஸ்அப் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.