AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.16,000 Discount.. மிஸ் பண்ணிடாதீங்க!

Apple iPhone 17 Pro Gets Huge Discount | ஆப்பிள் ஐபோன் 18 விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.16,000 Discount.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஐபோன் 17 ப்ரோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2026 22:32 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை (Smartphone) அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் கடைசியாக ஆப்பிள் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 17 Series Smartphones) அறிமுகம் செய்த நிலையில், விரைவில் அடுத்த சீரீஸான ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு (Apple 17 Pro Smartphone) அந்த நிறுவனம் அசத்தல் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவுக்கு அசத்தல் தள்ளுபடி

ஆப்பிள் 18 சீரீஸ் அறிமுகத்தையொட்டி ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆப்பிள் 17 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்டில் தற்போது ரூ.16,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1,34,900 மதிப்புள்ள இந்த ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1,26,900-க்கு வாங்கிக்கொள்ளலாம். அதாவது, அறிமுக விலையில் இருந்து ரூ.8,000 குறைவாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க : ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.11,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் ஒன்பிளஸ்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்கள் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி ரூ.8,000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.16,000 வரை தள்ளுபடியில் பெறலாம்.

ரூ.1,18,900-க்கு ஐபோன் 17 ப்ரோவை வாங்கிக்கொள்ளலாம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சலுகைகளையும் பெற நீங்கள் தகுதி உள்ளவர்கள் என்றால் உங்களால் இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,18,900-க்கு வாங்கிக்கொள்ள முடியும். மெமரி சிப் சிக்கல் காரணமாக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களும், புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களும் விலை உயர்த்தப்படுகின்றன. ஒருவேளை ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படும் பட்சத்தில் இது ஒரு சிறந்த தள்ளுபடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us