AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!

Notification Bubbles Feature | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் செயலியில் உள்ளதை போலவே நோட்டிபிகேஷன் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போது சோதனையில் உள்ளது.

ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ்அப்பிலும் Notification Bubbles அம்சம்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Apr 2026 23:02 PM IST

உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டான் (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலியை ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக மெட்டா புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் (Facebook) செயலியில் உள்ளதை போலவே வாட்ஸ்அப் செயலியிலும் Notification Bubbles அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் வர உள்ள இந்த புதிய அம்சம் தொடர்பான அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபேஸ்புக்கை போலவே வாட்ஸ் அப்பிலும் Notification Bubbles

ஃபேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) செயலியை பயன்படுத்தியவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பரிட்சியமானதாக இருக்கும். அதாவது பயனர்கள் தங்களது உரையாடல்களை எளிமையானதாக்க மாற்ற இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பயனர்கள் செயலிகளை திறக்காமலே இந்த அம்சத்தின் மூலம் ஒருவர், மற்றொருவருடன் மிக எளிதாக உரையாற்ற முடியும். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்

வேறு செயலிகளை பயன்படுத்திக்கொண்டே குறுஞ்செய்தி அனுப்பலாம்

வாட்ஸ்அப் செயலியை திறக்காமலே வேறு செயலியை பயன்படுத்திக்கொண்டே கூட இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் பெறும் குறுஞ்செய்திகளை உடனே படித்துவிட்டு அதற்கு உடனடியாக பதில் அளிக்க இந்த அம்சம் வழிவகை செய்யும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் வேறு செயலிகளை பயன்படுத்தும்போதோ அல்லது யூடியூபில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தாலோ இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ் – மத்திய அரசு எச்சரிக்கை – தவிர்ப்பது எப்படி?

வாட்ஸ்அப்பின் தோற்றம் 2013 ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமலே அப்படியே உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தோற்றத்தில் புதிய மாற்றத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us