AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட் – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?

WhatsApp Tests Major Redesign : வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய அளவில் டிஷைனை மாற்றத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் வரும் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதில் என்னென்ன புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்டவுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் டிசைனில் மிகப்பெரிய அப்டேட்  – என்னென்ன மாற்றங்கள் வரப்போது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Apr 2026 21:05 PM IST

உலக முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய அளவில் டிஷைனை மாற்றத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தகவல்களை பரிமாற, டாக்குமென்ட் மற்றும் வீடியோ ஆடியோ, புகைப்படங்களை அனுப்ப என நம் பணிகளை எளிதாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த இந்த செயலியில் தற்போது புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட் தற்போது பரிசோதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

புதிய அப்டேட்டில் என்ன மாற்றங்கள்?

புதிய அப்டேட்டில் இதுவரை இருந்த வாட்ஸ்அப் என்ற எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வாட்ஸ்அப் செயலியின் லோகோ மேல் பகுதியில் இடம் பெற உள்ளது. இது நம் வாட்ஸ்அப் சுத்தமாகவும், எளிமையாகவும் மாற்றும் கூடுதல் அம்சங்களுக்கு இதில் இடத்தை உருவாக்கும். புதிய நவீன வடிவமைப்புடன் அதிக இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களுன் வரவிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வாட்ஸ்அப் அதன் வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

நோட்டிஃபிகேஷன் பபுள் அம்சம்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் புதிய நோட்டிஃபிகேஷன் பபுள் என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி மெசேஜ் வந்தால், அந்த ஐகானை கிளிக் செய்தால் சிறிய சாட்பாக்ஸ் திறக்கும். இதன் மூலம் வாட்ஸ்அப் செல்லாமலேயே மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும். அதாவது நாம் வேறு ஆப்பில் இருக்கும்போது அங்கிருந்தபடியே வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும். இதனால் நம் கவனம் சிதறாது. பயனர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை ஆஃப் செய்யலாம். அதாவது வீடியோ பார்க்கும்போது உடனடியாக வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும்.

வாட்ஸ்அப் சேனலில் வரும் மாற்றம்

இதன் மூலம் வாட்ஸ்அப் சேனல் அட்மின் 24 மணி நேரத்திற்கு மட்டும் காணப்படும் வகையில் ஸ்டேட்டாஸ் வைக்க முடியும். இது சாதாரண வாட்ஸ்அப் போலவே செயல்படும். மேலும் அறிவிப்புகளை வெளியிடவும் ஆப்சன் இடம் பெயர உள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் சோதனை கட்டத்தில் உள்ளது.

இந்த அனைத்து அம்சங்களும் தற்போது சோதனை நிலையிலேயே உள்ளன. சோதனை அடிப்பைடையில் சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் பயன்பாடு மிகவும் எளிதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us