AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

Smartphones To Launch In May 2026 | ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026, மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 18:12 PM IST

உலக அளவில் பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026, மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மே மாதத்தில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்

2026, மே மாதத்தில் சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஒன்பிளஸ் நார்ட் சிஇ ஸ்மார்ட்போன் (OnePlus Nord CE Smartphone) அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அட்டகாசமான தோற்றத்துடன் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மே 07, 2026 அன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Vivid Mint மற்றும் Hyper Black என மொத்தம் இரண்டு வண்ணங்களில் அறிமுகமாக உள்ளது.

இதையும் படிங்க : ஏஐக்கான செலவு மனிதர்களை விட அதிகமா? சிக்கலில் ஐடி நிறுவனங்கள்

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்

ஒன்பிளஸ் நிறுவனம் மே மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ள மற்றொரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் தான் இந்த ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE6 Lite). இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா, நீடித்து உழைக்கும் பேட்டரி மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு சிறந்த அம்சங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 50 எம்பி முதன்மை கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் அம்சத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் மே 07, 2026 அன்று பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இதையும் படிங்க : டிஜிட்டல் கைது என மிரட்டல்.. முதியவரிடம் இருந்து ரூ.2.07 கோடி கொள்ளையடித்த கும்பல்!

விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எஃப்இ

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் புகைப்பட கருவிகளை சார்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மறுபுறம் விவோ எக்ஸ்300 எஃப்இ ஸ்மார்ட்போன் உயர்தர அனுபவத்தை வழங்கினாலும் விலை அடிப்படையில் இது சற்று மலிவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் சாமானியர்களும் இந்த ஸ்மார்ட்போனை எளிதாக வாங்க முடியும்.

Follow Us