13,380 mAh பேட்டரி.. அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4!
OnePlus Pad 4 Introduced In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் பேட் 4-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக ஒன்பிளஸ் (OnePlus) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் 4-ஐ (OnePlus Pad 4 ) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த டேபின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் பேட் 4
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் பேட் 4-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி LPDDR5X RAM மற்றும் 512ஜிபி UFS ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13.2 இன்ச் எல்சிடி பேனல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி 20%-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் சிக்கல்!
இந்த ஒன்பிளஸ் பேட் 4 13,380 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கும் வகையில் 80 வாட்ஸ் SUPERVOOC அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேபை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 20 மணி நேரம் வரை தொடர்ந்து வீடியோ பிளே செய்ய முடியும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக பேட்டரி திறன் கொண்ட டேபை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
ஒன்பிளஸ் பேட் 4 – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
It’s here. #OnePlusPad4 sale starts May 5, 12 PM IST.
Get notified: https://t.co/Ulp8gRflZj pic.twitter.com/ljcagCLcLK
— OnePlus India (@OnePlus_IN) April 30, 2026
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் பேட் 4 ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக மெமரி மற்றும் ஸ்டோரேஜ் அம்சத்தை எதிர்பார்க்கும் நபர்கள் ரூ.64,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டேபை தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க : மே மாதத்தில் அறிமுகமாக உள்ள அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் நிறுவனம் ரூ.5,000 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ரூ.59,999 ஆரம்ப விலையாக உள்ள ஒன்பிளஸ் பேட் 4-ஐ வெறும் ரூ.54,999-க்கே வாங்கிக்கொள்ளலாம். இது மே 05, 2026 பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.



