டேட்டா இல்லாத புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த BSNL.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
BSNL Rs 172 Voice Only Plan | பிஎஸ்என்எல் நிறுவனம் தனது டேட்டா இல்லாத புதிய ரீச்சார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டேட்டா இல்லாத குரல் அழைப்புகளை மட்டுமே கொண்ட ரீச்சார்ஜ் திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என டிராய் (TRAI – Telecom Regulatory Authority Of India) கூறிய நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா இல்லாத் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏர்டெல் நிறுவனம் இந்த டேட்டா இல்லாத ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் தற்போது டேட்டா இல்லாத ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள அந்த இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய ரீச்சார்ஜ் திட்டம்
தற்போதைய சூழலில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதாவது, பெரும்பாலான பொதுமக்கள் தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் தங்களது அனைத்து திட்டங்களையும் டேட்டா திட்டங்களாக மாற்றிவிட்டன. இதன் காரணமாக பட்டன் போன்களை பயன்படுத்தும் நபர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான டேட்டா கொண்ட ரீச்சார்ஜ் திட்டங்களையே ரீச்சார்ஜ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையும் படிங்க : சொமேட்டோவில் இனி பிடித்த கடைகளில் ஆர்டர் செய்யலாம்.. தூரம் ஒரு Matter இல்லை.. வந்தது புதிய அம்சம்!




டேட்டா இல்லாத திட்டங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்கள்
இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், டிராய் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா இல்லாத திட்டங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது டேட்டா இல்லாத திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இதையும் படிங்க : ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?
ரூ.172-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரீச்சார்ஜ் திட்டம்
இந்த நிலையில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.172-க்கு தனது புதிய பட்ஜெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. டேட்டா இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் அம்சத்தை கொண்டுள்ளது. லோக்கல், எஸ்டிடி மற்றும் சர்வதேச கால்களையும் இந்த திட்டத்தின் மூலம் பேசலாம். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகள் வரை அனுப்ப முடியும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள் ஆகும்.