AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ

Youtube Premium : இண்டர்நெட் இல்லாதபோதும் வீடியோக்களை பார்க்கும் வசதியை யூடியூப் வழங்குகிறது. குறிப்பாக பயணங்களின்போது, குறைந்த இண்டர்நெட் ஸ்பீட் அல்லது டேட்டா குறைவாக இருக்கும் தருணங்கள் போன்ற சூழல்களில் இந்த ஆஃப்லைனில் யூடியூப் பார்க்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Apr 2026 18:39 PM IST

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளமாக யூடியூப் இருந்து வருகிறது. பலர் வீடியோ, ஷார்ட்ஸ் பார்க்க யூடியூபை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இண்டர்நெட் இல்லாதபோதும் வீடியோக்களை பார்க்கும் வசதியையும் வழங்குகிறது. குறிப்பாக பயணங்களின்போது, குறைந்த இண்டர்நெட் ஸ்பீட் அல்லது டேட்டா குறைவாக இருக்கும் தருணங்கள் போன்ற சூழல்களில் இந்த ஆஃப்லைனில் யூடியூப் பார்க்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் பார்ப்பது எப்படி?

யூடியூபில் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க, அவற்றை முன்கூட்டியே டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கான எளிய வழி யூடியூப் பிரீமியம் சேவையை பயன்படுத்துவதுதான். யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.149 கட்டணத்தில் பெறலாம். இந்த சேவையின் மூலம் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்யலாம், பின்னர் இண்டர்நெட் இல்லாத போது பார்க்கலாம். ஆனால் அதனை யூடியூப் ஆப்பில் மட்டுமே இயங்கும். குறிப்பாக நீண்ட நேரம் பயணங்கள் மேற்கொள்பவர்கள் யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க : செப்டம்பர் முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. அதிரடி அறிவிப்பு!

உங்களிடம் யூடியூப் பிரீமியம் வசதி இருந்தால் அதனை தெரிந்துகொள்ள யூடியூப் ஆப் சென்று நீங்கள் பார்க்க வேண்டிய வீடியோவை சர்ச் பகுதியில் தேட வேண்டும். பின்னர் வீடியோ அருகில் இருக்கும் 3 டாட்டை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் டவுன்லோடு ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். வீடியோ குவாலிட்டியை தேர்வு செய்யவும். இப்படி டவுன்லோடு செய்வதற்கு டேட்டா தேவை என்பது குறிப்பிடத்தக்கது. டவுன்லோடு செய்யும்போது எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படும் என்பதையும் இந்த செயலி காட்டும்.

பொதுவாக யூடியூப் வீடியோ வைஃபை மூலம் மட்டும் டவுன்லோடு ஆகும். மொபைல் டேட்டா பயன்படுத்தி டவுன்லோடு செய்ய செய்ய செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Download Over Wi-Fi Only என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மொபைல் டேட்டா பயன்படுத்தி வீடியோவை டவுன்லோடு செய்யலாம். நாம் டவுன்லோடு செய்த வீடியோ யூடியூப் ஆப்பின் டவுன்லோட்ஸ் பகுதியில் இருக்கும்.

இதையும் படிக்க : ஸ்மார்ட் போனில் எரியும் சிறிய பச்சை லைட் .. ஆபத்தா?.. உண்மை என்ன?

நாம் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோவை தொடர்ந்து பார்க்க, குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு ஒருமுறை இண்டர்நெட் கணெக்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வீடியோ எக்ஸ்பயர் ஆகிவிடும். நாம் டவுன்லோடு செய்த வீடியோவை டெலிட் செய்ய, வீடியோ அருகில் இருக்கும் 3 டாட்ஸ் ஐகானை அழுத்தவும். அதில் Delete from Download என்பதை தேர்வு செய்யலாம்.

Follow Us