AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.399க்கு 3டிபி டேட்டா! பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர் – அப்படி என்ன ஸ்பெஷல்?

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த செலவில் அதிக டேட்டா வழங்கும ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு மாதம் ரூ.399 செலவில் 3டிபி டேட்டா வழங்குவதால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களுக்கு சிறந்த திட்டமாக பாரக்கப்படுகிறது.

ரூ.399க்கு 3டிபி டேட்டா! பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Apr 2026 20:00 PM IST

இந்தியாவில் குறைந்த செலவில் வேகமான பிராட்பேண்ட் இணைய சேவையை தேடும் பயனர்களுக்கு அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி மாதம் ரூ.399 என்ற மிகக்குறைந்த விலையில் பைபர் பிராட்பேண்ட் திட்டம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள், வீட்டில் இருந்தபடி வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.399 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்த திட்டத்தின் மூலம் முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.399 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். குறிப்பாக மொபைல் டேட்டா பெறும் செலவில் நம்மால் ஒரு ஃபைபர் பிராண்ட் எனப்படும் ஹை ஸ்பீட் இண்டர்நெட் சேவை நமக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மாத கட்டணமாக ரூ.449 இருக்கும் என கூறப்படுகிறது. இதில் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமாக சேர்க்கப்படலாம். அதன்படி மாதம் ரூ. 470 முதல் ரூ.500 வரை செலவாகும்.

இதையும் படிக்க : போன் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இந்த 6 டிரிக்ஸை டிரை பண்ணுங்க!

இண்டர்நெட் ஸ்பீட் எப்படி இருக்கும்?

இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோடு மற்றும் அப்லோட் வசதி வழங்கப்படுகிறதி. இதன் மூலம் ஹெச்டி மற்றும் 4கே வீடியோ பார்க்க முடியும். ஆன்லைன் வகுப்புகளை தடையின்றி பங்கேற்க முடியும். மேலும் ஜூம், கூகுள் மீட் போன்றவற்றில் எளிதாக அலுவலக மீட்டிங்கில் பங்கேற்க முடியும். மேலும் ஆன்லைன் கேமிங் போன்றவற்றிற்கும சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மாதம் 3.3 டிபி வரை இண்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. இது சாதாரண குடும்பத்திற்கு தேவைக்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறதி. டேட்டா வரம்பை கடந்தால் இண்டர்நெட் ஸ்பீட் குறைக்கப்படலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.

மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லேண்ட்லைன் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீட்டில் லேண்ட்லைன் பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. ஆனால் லேண்ட்லைன் போன் இதற்காக தனியாக வாங்க வேண்டும்.

இதையும் படிக்க : வெப் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. 49 தீம்களுடன் விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

குறைந்த பட்ஜெட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் தேவைப்படுபவர்களுக்கு, மாணவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு, சிறிய குடும்பங்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த வசதி இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்காது. பிஎஸ்என்எல் சேவை குறிப்பாக ஃபைபர் இணைப்பு உள்ள இடங்களில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பகுகதிக்கு அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு சென்று இந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Follow Us