AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: பயிற்சியாளர் பதவி போதும்.. விலகும் முக்கிய நபர்.. பிசிசிஐயின் அடுத்த திட்டம் என்ன?

Ryan ten Doeschate: ரியான் டென் டோஷ்கேட்டிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ரியான் டென் அந்த அணியில் ஒரு வீரராக இருந்து, அந்த அணி 2 பட்டங்களை (2012 மற்றும் 2014) வெல்ல உதவினார். பின்னர், 2022-ல் அவர் அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 2024 வரை ரியான் டென் டோஷ்கேட் பயிற்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

Team India: பயிற்சியாளர் பதவி போதும்.. விலகும் முக்கிய நபர்.. பிசிசிஐயின் அடுத்த திட்டம் என்ன?
ரியான் டென் டோஷ்கேட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2026 20:55 PM IST

இந்திய அணியின் (Indian Cricket Team) உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட் (Ryan ten Doeschate) திடீரெனப் பதவி விலக முடிவு செய்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரவிருக்கும் ​​ஐபிஎல் 2027-ல் ரியான் டென் டோஷ்கேட் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியளிப்பார் என்றும் தெரிகிறது. இந்த ராஜினாமா கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றிய முன்னாள் நெதர்லாந்து வீரர் ரியான் டென் டோஷ்கேட், இங்கிலாந்தில் நடைபெறும் டி20 தொடருக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலகுவார் என்று யூகங்கள் பரவி இருந்தன.

ALSO READ: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?

விலகல் முடிவு ஏன்..?


இங்கிலாந்தில் இருந்தபோது ரியான் டென் டோஷ்கேட் தனது முடிவை பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறியது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டிலும் இந்திய அணி தோல்விகளைச் சந்தித்திருந்தது. கவுதம் காம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, ​​நெதர்லாந்தின் முன்னாள் கேப்டன் ரியான் டென் டோஷ்கேட் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக ரியான் டென் பதவி விலகுவார் என்று முந்தைய செய்திகள் கூறியிருந்தன.

மீண்டும் கொல்கத்தா அணியுடன் இணைகிறாரா..?

ரியான் டென் டோஷ்கேட்டிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நீண்டகாலத் தொடர்பு உண்டு. ரியான் டென் அந்த அணியில் ஒரு வீரராக இருந்து, அந்த அணி 2 பட்டங்களை (2012 மற்றும் 2014) வெல்ல உதவினார். பின்னர், 2022-ல் அவர் அந்த அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 2024 வரை ரியான் டென் டோஷ்கேட் பயிற்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். அதன் பிறகு, கவுதம் பயிற்சியாளராக இந்திய அணியில் இணைந்தபோது, ரியான் டென் டோஷ்கேட் கேகேஆர் அணியின் துணைப் பணியாளர் குழுவிலிருந்து விலகி இந்திய அணியில் இணைந்தார்.

ALSO READ: இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. கடுமையாக சாடிய கவாஸ்கர்!

ரியான் டென் டோஷ்கேட் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த காலத்தில், இந்திய அணி 2025 ஆசியக் கோப்பையையும் 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இருப்பினும், இந்திய அணி பல தோல்விகளையும் சந்தித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்ததுடன், சொந்த மண்ணில் நியூசிலாந்து (0-3) மற்றும் தென்னாப்பிரிக்கா (0-2) அணிகளிடம் பெரும் தோல்விகளையும் சந்தித்தது.

Follow Us