இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – பும்ரா, சாய் சுதர்சன் நிலை என்ன?
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில் கேப்டனாகத் தொடரும் நிலையில், சரண்சு ஜெயின் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் உடல் தகுதிச் சான்றிதழுக்காகக் காத்திருக்கின்றனர்.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில் கேப்டனாகத் தொடரும் நிலையில், சரண்சு ஜெயின் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் உடல் தகுதிச் சான்றிதழுக்காகக் காத்திருக்கின்றனர். மேலும் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டியில் தேர்வ செய்யப்படாததும் கேள்விகளை ஏஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ஏற்கனவே தங்களை நிலைநிறுத்திக்கொண்ட முக்கிய வீரர்கள் மீது தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க : Team India: எப்படி விளையாட வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை.. சஞ்சு சாம்சன் பதிலால் அதிர்ச்சி!




இளம் ஆல் ரவுண்டரான சரண்சு ஜெயின் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்படித்துள்ளார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற முக்கிய வீரர்கள் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களான தேவ்தத் படிக்கல், மானவ் சுதர் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துருவ் ஜூரல் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அணியில் உள்ள சில நட்சத்திர வீரர்களின் உடல் தகுதி குறித்த தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம் வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க பிசிசிஐயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பிடமிருந்து உடல் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும். இதற்கிடையில், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்யப்படவில்லை.
இதையும் படிக்க : Team India: 19 நாட்கள் ஓய்வில் இருக்கும் இந்திய அணி.. அடுத்த சர்வதேச போட்டி எப்போது..?
இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய அணி கொழும்பில் ஆகஸ்ட் 7 முதல் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்திலும் நடைபெறும்.
இந்திய டெஸ்ட் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், படிக்கல், சரண்ஷ் ஜெயின்.