AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வில் தாமதம் ஏன்? பிசிசிஐ விளக்கம்!

IND vs SL Test Series: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது பும்ரா காயமடைந்தார். அதைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியிலிருந்தும் பும்ரா விலக்கப்பட்டார். டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது தற்போது சந்தேகத்தில் உள்ளது. அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அவரது தேர்வு அமையும்.

IND vs SL: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வில் தாமதம் ஏன்? பிசிசிஐ விளக்கம்!
இந்திய டெஸ்ட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jul 2026 16:34 PM IST

இந்திய அணி (Indian Cricket Team) ஜிம்பாப்வே (IND vs ZIM) டி20 தொடருக்கு பிறகு இலங்கை சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலியில் தொடங்குகிறது, இரண்டாவது டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் நடைபெறும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வருகின்ற 2026 ஜூலை 28ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா பதிலளித்துள்ளார். வீரர்களின் உடற்தகுதி அறிக்கைகளுக்காக தேர்வாளர்கள் காத்திருக்கின்றனர் என்றும், அதன் பிறகு அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ALSO READ: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா – ஜிம்பாப்வே வீரர்கள்.. இதுதான் காரணமா?

நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பா..?

அணித் தேர்வைத் தொடர்ந்து, இந்திய அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 4ம் தேதி இலங்கைக்குப் புறப்படும். அங்கு, இந்திய அணி 2026 ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கும் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான நிதிஷ் குமார் ரெட்டியின் தேர்வு நிச்சயமற்றதாகத் தெரிகிறது. தனது காயத்திலிருந்து மீள்வதற்காக நிதிஷ், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் மறுவாழ்வு சிகிச்சையை மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி இடம் பெற்றிருந்தார். அப்போட்டியில் அவருக்குத் தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

மேலும் சில வீரர்களுக்கு காயமா?

ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதால், தொடரில் அவர்களின் பங்கேற்பு நிச்சயமற்றதாக உள்ளது. காயமடைந்த வீரர்களில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது பும்ரா காயமடைந்தார். அதைத் தொடர்ந்து, 3வது ஒருநாள் போட்டியிலிருந்தும் பும்ரா விலக்கப்பட்டார். டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது தற்போது சந்தேகத்தில் உள்ளது. அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அவரது தேர்வு அமையும். பும்ராவைத் தவிர, ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தொடர் முழுவதும் இருந்து விலகியுள்ளனர்.

சாய் சுதர்ஷனுக்கும் காயம்..

இளம்  வீரர் சாய் சுதர்ஷனும் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். சுதர்சன் தனது உடற்தகுதியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விரைவாக குணமடைந்து வருகிறார். இருப்பினும், அவரது தேர்வும் அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். சுதர்ஷன் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே, அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.

ALSO READ: வெறும் 15 நாட்கள் மட்டுமே.. இங்கிலாந்திடம் முதலிடத்தை பறித்த இந்தியா!

இதுமட்டுமின்றி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலக்கப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. உடல் தகுதியுடன் இருந்தால், வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

Follow Us