IND vs ZIM: ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா! ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் டி20 தொடர் வெற்றி..
IND vs ZIM 3rd T20 Highlights: 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் தூக்கியது.
இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 81 ரன்கள் எடுத்திருந்தார். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் தூக்கியது. இதன்மூலம், ஷ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்ஷி கீழ் முதல் டி20 தொடரை இந்திய அணிக்கு (Indian Cricket Team) வென்று கொடுத்துள்ளார்.
ALSO READ: தோல்வி எதிரொலி! கவுதம் காம்பீர் மீது நடவடிக்கை? கூட்டத்தை கூட்டும் பிசிசிஐ!




இந்தியாவின் இன்னிங்ஸ்
3rd T20I. India Won by 35 Runs https://t.co/oApMpI6eRc #TeamIndia #ZIMvIND #3rdT20I
— BCCI (@BCCI) July 26, 2026
இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கியது . இந்த அதிரடி ஜோடி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அபிஷேக் சர்மா வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் ஜோடி இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இஷான் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, வைபவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இன்னிங்ஸை முன்னெடுத்துச் சென்றனர். இருவரும் சேர்ந்து 50 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அதிரடியாக பேட்டிங் செய்தபோது வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் இன்னிங்ஸும் 27 ரன்களில் முடிவடைந்தது. அதே சமயம், ரிங்கு சிங் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கலக்கிய இளம் வந்துவீச்சாளர்கள்:
மயங்க் யாதவ் இந்திய பந்துவீச்சிற்கு ஒரு நேர்மறையான தொடக்கத்தை அளித்தார். அவர் முதல் பந்திலேயே பிரையன் பென்னட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் காரணமாக, பவர்பிளேயில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகளை இழந்தது. ரன் விகிதத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, பவர்பிளேயில் ஜிம்பாப்வே 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஜிம்பாப்வே அணிக்காக ரியான் மட்டும் போராடி அரைசதம் அடிக்க, கௌரவ ஸ்கோரை தொட முடிந்தது. இவரை தவிர, பென் கர்ரன் 20 ரன்களும், வெஸ்லி 28 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
ALSO READ: ஜிம்பாப்வேக்கு எதிராக சூறாவளியாய் சுழன்ற சூர்யவன்ஷி.. குவிந்த சாதனை பட்டியல்..!
இந்திய அணி சார்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசோக் சர்மா 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், யாஷ் தாக்கூர் நான்கு ஓவர்களில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.