Team India: எப்படி விளையாட வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை.. சஞ்சு சாம்சன் பதிலால் அதிர்ச்சி!
Sanju Samson: எனது ஆட்டத்தை ரசித்து விளையாடுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தேன். அணிக்குள் தொடர்ந்து உட்கட்சிப் பூசல்கள் இருப்பதை நான் கவனித்திருந்தேன். மேலும், 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே, நான் அதில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் என்று சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின் போது ஏற்பட்ட ஒரு சிறிய ஃபார்ம் சரிவு காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் (Indian Cricket Team) இருந்து சாம்சன் நீக்கப்பட்டார். இருப்பினும், இதுகுறித்து விளக்கமளித்த பிசிசிஐ சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளித்ததாகவே தெரிவித்தது. இந்தநிலையில், சஞ்சு சாம்சன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்துள்ளார். அவர் இளம் வயதிலேயே சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார், ஆனால் வாய்ப்புகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்திகொண்ட சஞ்சு சாம்சன், 2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். இந்தநிலையில், தற்போது பார்ம் அவுட்டில் உள்ள சஞ்சு சாம்சன் (Sanju Samson) எப்படி விளையாட வேண்டும் என்று எனக்குச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா! ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் டி20 தொடர் வெற்றி..
சஞ்சு சாம்சன் கோபத்திற்கு காரணம் என்ன..?
தனது பேட்டிங் பார்ம் குறித்து ஜியோஸ்டாரின் ‘பிலீவ்’ நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், “இந்தப் போராட்டங்கள், என் திறமைகளின் மீது முழு நம்பிக்கை கொண்ட, மிகவும் தன்னம்பிக்கையான ஒரு பேட்ஸ்மேனாக என்னை மாற்றியுள்ளன. அதுமட்டுமல்லாமல், இப்போது நான் ஆட்டத்தை முற்றிலும் என் சொந்த நிபந்தனைகளின்படி விளையாட முடிவு செய்துள்ளேன். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, போட்டிப் பந்தயத்தில் ஈடுபடாமல், தனது ஆட்டத்தை ரசித்து விளையாடுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தேன். அணிக்குள் தொடர்ந்து உட்கட்சிப் பூசல்கள் இருப்பதை நான் கவனித்திருந்தேன், மேலும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே, நான் அதில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். நான் ஆட்டத்தை ரசித்து விளையாட மட்டுமே விரும்பினேன்.” என்றார்.




ALSO READ: என் நபர் என்ற கேப்ஷன்.. காதலியை அறிமுகம் செய்த அர்ஷ்தீப் சிங்.. வைரலாகும் புகைப்படங்கள்!
எனக்கு எப்படி பேட் செய்ய வேண்டும் என்று தெரியும்..
எனக்கு இப்போது 31 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் திறன் எனக்கு உள்ளது. எனவே, எனது சொந்த நிபந்தனைகளின்படி விளையாட நான் முடிவு செய்துள்ளேன். எப்படி பேட் செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்ய வேண்டும் என்றோ யாரும் எனக்குச் சொல்ல முடியாது. நான் எனது சொந்த முடிவுகளை எடுத்து மரியாதையுடன் விளையாடுவேன்.
நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், எல்லா நேரங்களிலும் நமது ஆட்டத்திறனைக் கட்டுப்படுத்த முடியாது. ஆட்டத்திறன் வரும் போகும். அந்த நேரத்தில் எங்கள் அணியின் அமைப்பில், 2026 டி20 உலகக் கோப்பையில் நான் தான் ரன்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.” என்றார்.