AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்.. யார் இந்த சரண்ஷ் ஜெயின்?

Who is Saransh Jain: சரண்ஷ் ஜெயினின் இரத்தத்தில் கிரிக்கெட் ஊறியுள்ளது. இந்த விளையாட்டு அவருக்கு பரம்பரையாகக் கிடைத்திருக்கிறது. அவரது தந்தை சுபோத் ஜெயினும் மத்தியப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். தனது தந்தையிடமிருந்து உத்வேகம் பெற்று, சரண்ஷ் ஜெயின் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

IND vs SL: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்.. யார் இந்த சரண்ஷ் ஜெயின்?
சரண்ஷ் ஜெயின்Image Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2026 17:46 PM IST

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2026 ஜூலை 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா (IND vs SL Test Series) இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக, 15 பேர் கொண்ட அணியில் 33 வயதான ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வீரரின் பெயர் சரண்ஷ் ஜெயின். உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக சரண்ஷ் ஜெயின் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இந்திய டெஸ்ட் அணியில் திடீரென இடம்பிடித்துள்ள இந்த வீரர் யார் என்று கேள்விகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தநிலையில், யார் இந்த சரண்ஷ் ஜெயின் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடர் எப்போது, ​​எங்கு நடைபெறும்? முழு அட்டவணை இதோ!

மத்தியப் பிரதேசத்தின் ஆல்-ரவுண்டர்

இந்தூரைச் சேர்ந்த சரண்ஷ் ஜெயின், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ரஞ்சி கோப்பை வீரர் ஆவார். அணியில் சரண்ஷ் ஒரு ஆல்-ரவுண்டர். இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 2223 ரன்கள் எடுத்தும், 188 விக்கெட்டுகளை வீழ்த்தியும் உள்ளார். சரண்ஷ் ஜெயின் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆஃப்-ஸ்பின்னர் ஆவார். இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோல் நகரில் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொழும்பில் நடைபெறும். இந்திய அணி ஆகஸ்ட் 4 ஆம் தேதி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கு முன்னதாக, இரு அணிகளும் வருகின்ற 2026 ஆகஸ்ட் 7ம் தேதி கொழும்பில் 4 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடுவார்கள்.

சரண்ஷ் ஜெயின் இரத்தத்தில் கிரிக்கெட்:

சரண்ஷ் ஜெயினின் இரத்தத்தில் கிரிக்கெட் ஊறியுள்ளது. இந்த விளையாட்டு அவருக்கு பரம்பரையாகக் கிடைத்திருக்கிறது. அவரது தந்தை சுபோத் ஜெயினும் மத்தியப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். தனது தந்தையிடமிருந்து உத்வேகம் பெற்று, சரண்ஷ் ஜெயின் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இன்று சரண்ஷ் ஜெயின் இந்திய அணியில் ஓர் அங்கமாகியுள்ளார்.

சரண்ஷ் ஜெயின் தனது கிரிக்கெட் வாழ்க்கை 2014-ல் தொடங்கினார். அதே ஆண்டில், சரண்ஷ் ஜெயின் ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சரன்ஷ் ஜெயின் 1993 மார்ச் 31 அன்று பிறந்தார். சரண்ஷ் ஜெயின் 2014 டிசம்பர் 21 அன்று நடைபெற்ற 2014–15 ரஞ்சி டிராபியில் மத்தியப் பிரதேச அணிக்காக தனது முதல் தொடர் அறிமுகத்தை மேற்கொண்டார். அவர் 2017 பிப்ரவரி 25 அன்று விஜய் ஹசாரே டிராபியில் மத்தியப் பிரதேச அணிக்காக தனது லிஸ்ட் ஏ அறிமுகத்தை மேற்கொண்டார்.

ALSO READ: பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு இருக்கும் சவால்.. இலங்கை தொடர் ஏன் முக்கியம்..?

இந்திய டெஸ்ட் அணி

சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெயஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், துருவ் ஜூரல், தேவ்தத் பெடிக்கல், மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பரத் மற்றும் சரண்ஷ் ஜெயின்

Follow Us