Team India: சாம்சனுக்கு ஒரு விதி.. அபிஷேக்கிற்கு ஒரு விதியா..? வாய்ப்பு குறித்து முன்னாள் இந்திய வீரர் காட்டம்!
Abhishek Sharma Performance: 2026ம் ஆண்டு அபிஷேக் சர்மாவின் செயல்பாடு சிறப்பாக இல்லை. இந்த ஆண்டு விளையாடிய 23 போட்டிகளில் அபிஷேக் சர்மா 23.36 சராசரியில் 5 அரை சதங்கள் உதவியுடன் 514 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அபிஷேக் ஷர்மாவின் சராசரி 19.1 ஆகும். மேலும், கடந்த 10 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு அபிஷேக் சர்மா (Abhishek Sharma) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், அபிஷேக் சர்மா டி20 அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், அவரது செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவே இருந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்கள் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு கெட்ட கனவாகவே அமைந்தன. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவரால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. மேலும், ஜிம்பாப்வேயிலும் அவரது பேட்டிங் எடுபடவில்லை. அபிஷேக் சர்மா சுமாரான செயல்பாட்டைக் கண்டு, ஹனுமா விஹாரி இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 5 போட்டிகளில் சுமாரான செயல்பாட்டைக் காட்டியதால் சஞ்சு சாம்சன் இந்திய அணியிலிருந்து (Indian Cricket Team) நீக்கப்பட்டார். இப்போது அபிஷேக் ஷர்மா விஷயத்தில் ஏன் அப்படிச் செய்யப்படவில்லை? இங்கு ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதி உள்ளதா என்று ஹனுமா விஹாரி நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ALSO READ: எப்படி விளையாட வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை.. சஞ்சு சாம்சன் பதிலால் அதிர்ச்சி!
ஹனுமா விஹாரி என்ன கூறினார்?
ஹனுமா விஹாரி தனது யூடியூப் சேனலில் கடும் விமர்சனத்தை முன்வைத்ததாவது, ”உலகக் கோப்பைக்கு முன்பு நடந்த 5 போட்டிகளில் சஞ்சு சாம்சனால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதனால் சாம்சன் ஆடும் லெவனில் தனது இடத்தை இழக்க நேரிட்டது. இதற்குப் பிறகு, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பி, டி20 உலகக் கோப்பையில் தொடரின் சிறந்த வீரர் ஆனார். அந்தத் தொடரில் அபிஷேக் சர்மா எத்தனை ரன்கள் எடுத்தார்?” என்றார்.




தொடர்ந்து பேசிய ஹனுமா விஹாரி, ”இங்கிலாந்தில் நடந்த தொடரில் அபிஷேக் ஷர்மா ஒரு அரைசதம் அடித்தார். இதைத் தவிர, அபிஷேக் ஒரு பெரிய இன்னிங்ஸ் கூட ஆடவில்லை. கடந்த 8 போட்டிகளில் அபிஷேக் ஒரு அரைசதம் அடித்துள்ளார். கடந்த 18 போட்டிகளில் அபிஷேக் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார். சாம்சன் உலகக் கோப்பையில் எத்தனை போட்டிகளில் விளையாடினார்? அப்படியானால் மூன்று… அவர் மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 போட்டிகளில் அபிஷேக் ஷர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 16. இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை? ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதிகள் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
ALSO READ: ஆல்ரவுண்டர் இல்லாமல் தவிக்கும் இந்திய அணி.. ஹர்திக் பாண்ட்யா காயம் குணமடைந்ததா?
அபிஷேக் ஷர்மாவின் செயல்திறன்:
2026ம் ஆண்டு அபிஷேக் சர்மாவின் செயல்பாடு சிறப்பாக இல்லை. இந்த ஆண்டு விளையாடிய 23 போட்டிகளில் அபிஷேக் சர்மா 23.36 சராசரியில் 5 அரை சதங்கள் உதவியுடன் 514 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அபிஷேக் ஷர்மாவின் சராசரி 19.1 ஆகும். மேலும், கடந்த 10 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் அபிஷேக் சர்மாவால் மொத்தமாகவே 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், அபிஷேக் ஷர்மா மீதான அழுத்தம் அதிகரித்தது. வைபவ் சூர்யவன்ஷியின் செயல்பாடு அவரை விட சிறப்பாக உள்ளது. சூர்யவன்ஷி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று இன்னிங்ஸ்களில் 151 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.