AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சின்னத்திரை சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?

Highest Paid Tamil TV Actresses: தமிழ் மக்கள் சினிமாவை பார்ப்பதை விடவும் சின்னத்திரை சீரியல்கள் பார்ப்பது அதிகம். அந்த விதத்தில், சின்னத்திரை சீரியல்களில் அதிகமாக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள் யார் யார் என விவரமாக பார்க்கலாம். மேலும் அவர்களின் மொத சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

சின்னத்திரை சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?
தமிழ் சீரியல் நடிகைகள்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jul 2026 20:22 PM IST

சின்னத்திரை சீரியல்களுக்கெனவே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் தமிழ் சீரியல்களுக்கு சொல்லவே வேண்டாம். சினிமாவை விடவும் தமிழ் மக்களுக்கு சீரியல் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது. அதிலும் சன் டிவி (Sun TV), விஜய் டிவி (Vijay TV) மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil) போன்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. தங்களின் பிஸியான அன்றாட வாழ்க்கைக்கு பின் தற்போது மக்கள் இதுபோன்ற சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களை பார்த்து தங்களின் நேரத்தை கழித்தும் தங்களை நிம்மதியாகியும் வருகிறார்கள். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) போட்டியே இருக்கிறது.

இந்த சீரியல்களில் பல பிரபலங்கள் நடித்துவரும் நிலையில், அவர்களும் ஒரு சீரியலில் ஒரு நாளைக்கு நடிப்பதற்கே ஆயிரக்கணக்கில் சம்பளங்களை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், தமிழ் சின்னத்திரை சீரியல்களில் அதிகம் சம்பளம் பெரும் மூன்று நடிகைகள் நடிகைகள் யார் எந்த சீரியல் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை… உறுதி செய்த படக்குழு!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்:

மதுமிதா : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலின் நாயகியாக நடித்துவருபவர்தான் மதுமிதா. இதில் நிலா சோழனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களின் மூலம் இளைஞர்களையும் கவர்ந்துவருகிறார். இவர் நடித்துவரும் அய்யனார் துணை சீரியல்தான் விஜய் டிவியில் நம்பர் 1. இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ35,000 இவர் சம்பளமாக வாங்குகிறாராம்.

மனிஷா மகேஷ் :

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் சிங்கப் பெண்ணே. இந்த சீரியலில் மெயின் கதாநாயகியா நடித்து ரசிகர்களை கவர்ந்துவந்தவர்தான் நடிகை மனிஷா. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு, ஒரு நாளைக்கு சுமார் ரூ 30,000 சம்பளமாக வாங்கிவருகிறாராம்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட சண்டை காட்சி BTS வீடியோ வெளியீடு!

நடிகை சுவாதி கொண்டேவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by swathikonde (@swathi.konde_official)

சுவாதி கொண்டே :

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் சுவாதி கொண்டே இவர் நடிக்கும் மூன்று முடிச்சு சீரியலும் 1ல் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், இதற்கு முன் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில்நடித்திருந்தார். மேலும் மெய்யழகன் படத்தில் அரவிந்த் சுவாமியின் தங்கக்கையாக நடித்து மேலும் பிரபலமானார். இவர் மூன்று முடிச்சு சீரியலில் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு ரூ 85,000 முதல் 1,00,000 வரை சம்பளலமாக வாங்குகிறாராம். தமிழ் சீரியல்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக சுவாதி கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us