Train: விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட சண்டை காட்சி BTS வீடியோ வெளியீடு!
Train Movie Fight Scenes BTS Video: இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவந்த திரைப்படம்தான் ட்ரெயின். இந்த படமானது சிறப்பாக தயாராகிவந்த நிலையில், ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சண்டை காட்சிகளில் BTS வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாக மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில், இவர் இயக்குநர் மிஷ்கினின் (Mysskin) இயக்கத்தில் நடித்துவந்த திரைப்படம்தான் ட்ரெயின் (Train). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டிலே தொடங்கப்பட்ட நிலையில், முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் மிஷ்கின் வெறும் இயக்குநராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருடன் ஸ்ருதிஹாசன் (Shruti Haasan), நாசர், கே.எஸ்.ரவிக்குமார், இரா தயநாத், நரேன், கலையரசன் மற்றும் நடிகர் ரோஷன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திலிருந்து ரயிலுக்குள் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளில் BTS வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: நஸ்லேனின் அடுத்தப் பட இயக்குநர் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்
ட்ரெயின் திரைப்படத்தின் சண்டை காட்சிகளின் BTS வீடியோவை பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி:
The Electrifying Fight BTS of Train is out now! @theVcreations @mysskindirector @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @ActorRohan02@fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision… pic.twitter.com/EjiLrJ1HXk
— VijaySethupathi (@VijaySethuOffl) July 27, 2026
இந்த BTS வீடியோவில், விஜய் சேதுபதி மற்றும் நடிகை இரா போன்றவர்கள் இடம்பெறுகிறார். ரயிலுக்குள் ஒரு சிறிய இடத்தில் நடக்கும் சண்டை காட்சிகளை பற்றிய BTS வீடியோவாக இது வெளியாகியுள்ளது. ரயிலுக்கு வெளியே எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் மற்றும் அந்த சண்டை காட்சிகளை எவ்வாறு எடுக்கிறார்கள் போன்றவை இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட ரிலீஸ் எப்போது:
அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிம்பிளாக நடைபெற்றிருந்தது. இதில் தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ட்ரெயின் படத்தை 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில், இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!
ஆகஸ்ட் 15ம் தேதியில் சூர்யா, விஷால் மற்றும் கவின் போன்றவர்களின் படங்கள் வெளியாகும் நிலையில், அதையடுத்து இப்படம் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.