வெப் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. 49 தீம்களுடன் விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
New Update For Web WhatsApp Users | வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்மார்ட்போன் செயலிக்கு தொடர்ந்து பல்வேறு அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், வெப் வாட்ஸ்அப் பயனர்களுக்கான அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மெட்டாவை (Meta) தாய் நிறுவனமாக கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் அவ்வப்போது பல புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த இந்த தொடர் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயனர்களுக்கான அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு சூப்பர் அம்சம் விரைவில் அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் வெப் என இரண்டிலுமே பயன்படுத்த முடியும். பெரும்பாலான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் நிலையில், சிலர் வெப் வாட்ஸ்அப்பாக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் மொபைல் செயலிகளுக்கே பெரும்பாலும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் நிலையில், வெப் பயனர்களுக்கு சில அம்சங்கள் கிடைக்காமலே உள்ளன. இந்த நிலையில், வெப் பயனர்களுக்கான இந்த அட்டகாச அம்சம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கார் ஏசியை பாதுகாக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்!




49 தீம்கள் கொண்ட புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
அதாவது வாட்ஸ்அப் வெப்பில் பயனர்களுக்காக 49 தீம்களை கொண்ட புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து WABeta கூறியுள்ளதாவது, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப்பில் பயனர்கள் சாட் தீம்களை (Chat Theme) தேர்வு செய்துக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் வெப்பில் சாட் செய்வது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சாட்ஜிபிடியை நம்பி தவறாக நடந்துகொண்ட முன்னாள் காதலர் – ஓபன்ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெண்
தற்போதுள்ள சாட் அம்சத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், விரைவில் அறிமுகமாக உள்ள இந்த அம்சத்தில் பயனர்கள் ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனி தீம் செட் செய்யும் வசதி வழங்கப்படும். மொபைல் செயலியை மட்டுமன்றி, வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டையும் சுவாரஸ்யமானதாக மாற்ற வாட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் மிக விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.